வொஷிங்டன் , ஜுன் 25, 2019— கொழும்பின் தாழ்நில களனி நதிப் படுகை பகுதியில் வெள்ள அபாயங்களைக் குறைக்கவும் இலங்கை முழுவதும் காலநிலை எதிர்வுகூறல்களையும் முன்னெச்சரிக்கை முறைமைகளையும் மேம்படுத்தவும் உலக வங்கி இன்று 310 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
பல கட்ட நிகழ்ச்சி அணுகுமுறைகளைக் கொண்ட காலநிலைக்கு தாக்குபிடிக்கும் திறன் திட்டம் மொத்தமாக 774 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டதான மூன்றுகட்ட முதலீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டுவருடகாலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும்.
2017ம் ஆண்டில் மிகத் தீவிரமான காலநிலை நிகழ்வுகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. காலநிலை மாற்றங்காரணமாக 2050 ஆண்டளவில் இலங்கை ஆண்டுதோறும் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 1.2 சதவீதத்தை இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2010ம் ஆண்டுமுதல் 2018 ஆண்டுவரையான காலப்பகுதியில் ஏறத்தாழ 14 மில்லியன் மக்கள் வெள்ளத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் சுமார் 12 மில்லியன் மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் நிகழக்கூடிய ஏதுநிலையானது அதிகரிக்கும் என சான்றுகள் கோடிட்டுக்காட்டிநிற்பதுடன் கிட்டத்தட்ட 87 சதவீதமான இலங்கையர்கள் கடுமையான வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிக்கு முகங்கொடுக்கக் கூடியதான பகுதிகளில் வாழ்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும்.
'இந்த முழுiமான காலநிலைக்கு தாக்குபிடிக்கும் திறன் திட்டமானது பொருளாதாரத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்கும் அதேவேளை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுச் சொத்திற்கு ஏற்படும் இழப்புக்களை குறைக்கும்' என நேபாளம் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலகவங்கியின் வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவித்தார். 'இந்த நீண்ட காலத் திட்டமானது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடனான உட்கட்டுமானத்தையும் தொடர்பாடல் முறைமையையும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு உதவும் நிச்சயமான சான்றுகள் தெரியப்படுத்துகின்றன. '
இந்த நிகழ்ச்சித் திட்டமானது 2016ம், 2017ம் ஆண்டுகளில்; வெள்ளப்பெருக்குகளின் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நலிவுநிலையைக் குறைக்கவும் நிதி மற்றும் மெய்நிலை தாக்குபிடிக்கும் திறனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களுடன் பொருத்திச் செல்வதாகவும் அமைந்துள்ளது. 25 நதிப் படுகைகளில் உள்ள வெள்ள அபாய பகுதிகளில் வாழும் 3.5 மில்லியன் பயனாளர்கள் உள்ளடங்கலாக முழு நாட்டிற்கும் புதிய எதிர்வுகூறல் முறைமையானது பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகள் காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கக்கூடியவான தீர்மானங்களை எடுக்கும் விடயத்தில் பொதுமக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு தகவலளிக்கும் என சிரேஷ்ட அனர்த்த முகாமைத்துவ விசேட நிபுணர் பிரெட்ரிகா ரங்கியேரி மற்றும் செயலணிக்கு குழுவின் தலைவர் சுரங்க கஹன்தாவ ஆகியோர் அழுத்திக்கூறினர்.
புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியால் நிதியளிக்கப்படுகின்ற இந்த திட்டமானது 7 வருடங்கள் கருணைக்காலத்தை உள்ளடக்கியதான 32 வருடகால முதிர்வுக்காலத்தைக் கொண்ட கடiனை உள்ளடக்கியுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் ஐந்து வருடகாலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும். வினைத்திறனான நடைமுறைப்படுத்தலை உறுதிசெய்யும் வகையில் அடுத்த கட்டங்களுக்கான தயார்ப்படு;த்தல்கள் ஒன்றையொன்று மேற்பரவிச் செல்லும் . தகவமைப்பு கற்றலுக்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் தனியார் துறை பங்குபற்றலுக்கான சாத்தியத்துடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.