பிரியந்த பெர்னாண்டோ* (34) வழக்கமாக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றின் மீது மோதியது. அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் குடும்பத்தின் ஒரே வருமானமீட்டுபவரை இழந்தபோது அவர்களின் வாழ்க்கை உடனடியாக மாறுவதைக் கண்டனர். துரதிஷ்டவசமாக, இந்த துயரமான மற்றும் தேவையற்ற உயிர் இழப்புகள் இலங்கையில் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.
இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 38,000 விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக சுமார் 3,000 இறப்புகள் மற்றும் 8,000 கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. மதிப்பிடப்பட்ட வருடாந்த வீதி விபத்து இறப்புகள், தெற்காசியாவில் அதன் உடனடி அயல் நாடுகளில் மிக அதிகமாகவும், உலகில் சிறப்பாக செயல்படும் நாடுகளில் ஐந்து மடங்கு அதிகமாகவும் உள்ளது.
இலங்கையின் வீதிகளில் அதிக வீதி விபத்து மரணங்கள் மற்றும் காயங்கள் வீதம் கடந்த தசாப்தத்தில் வறுமையைக் குறைத்தல் மற்றும் செழிப்பை அதிகரிப்பதில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானவர்கள் 15-64 வயதுக்கு இடைப்பட்ட வேலை செய்யும் வயதுடையவர்களாகும்.
2011 மற்றும் 2018 க்கு இடையில் 67% - வாகன உரிமையின் விரைவான வளர்ச்சி மற்றும் பல்வேறு அளவுகள் மற்றும் வேகங்களின் மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்தின் பன்முகத்தன்மையால் இந்த நிலைமை மோசமடைகிறது. இதனால் பாதிக்கப்படக்கூடிய வீதிப் பயனாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 90%க்கும் அதிகமானோர் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களாகும்.
இந்த போக்கு தொடர்ந்தால், அவசரமாக தேவையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்த்தபடி, விபத்து இறப்புகள் மற்றும் காயங்கள் சீராக அதிகரிக்கும்.
இது நாட்டின் ஆரோக்கியம், நல்வாழ்வு, மனித மூலதனம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பிரச்சினையாகும். வீதி விபத்துக்கள் மற்றும் காயங்கள் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு வருடாந்தம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-5% வரை செலவாகும் என உலக வங்கி கணித்துள்ளது. செயல்படாமை தொடர்பான செலவும் மிகவும் அதிகமாக உள்ளது.