Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை ஜூலை 4, 2018

இளைஞரும் பெண்களுமே இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கின்றனர்

Image

We need youths to be at the forefront of creating jobs,” said Dr. Idah Z. Pswarayi-Riddihough, World Bank Country Director for Sri Lanka and the Maldives, at the launch of SLDU.

Photo Credit: World Bank


கதை சிறப்புக்கூறுகள்

  • - 2017இல், 15-24 வயதுக்கிடைப்பட்டோரின் வேலையில்லா வீதம் 18.5 ஆக இருந்தது- ஒப்பீட்டளவில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் 0.9 வீதமாக இருந்தது.
  • - தெளிவான, நியாயமான மற்றும் சீரான தொழில் சட்ட சீராக்கல்கள் மூலம் முறையான மற்றும் முறைசாரா தொழில்துறைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதோடு, ஊழியர்களையும் பாதுகாக்கிறது.
  • - இலங்கை சனத்தொகை முக்கியமான மாற்றமொன்றுக்கு உள்ளாகி வரும் இந்தக் காலகட்டத்தில் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் எப்போதையும் விட மிகத் தீர்க்கமானதாக அமைகின்றன.

2017இல் இலங்கையில் 497,000 தொழில் வெற்றிடங்கள் காணப்பட்டன. தேவையான தீர்க்கமான ஆற்றல்களில் தொழில் தேடுவோருக்கு இருக்கின்ற தகுதிகளுக்கும், தொழில் தருனர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையிலான ஒவ்வாத பொருத்தங்கள் சுற்றுலா போன்ற முக்கியமான தொழிற்துறைகளை நிலைமையின் தீவிரத்தை உணரவைத்துள்ளன. நாடு இப்போது இளைஞரின் தொழில்வாய்ப்பின்மையைக் காட்டுகின்ற இந்தக் காலகட்டத்தில் மேற்கண்ட எண்ணிக்ககைகள் இலங்கையில் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலின் அவசியத்தை கீழ்க்கோடிட்டுள்ளன.

உலக வங்கியின் புதிய இலங்கை அபிவிருத்தி பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவலை  [SLDU] அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது என்று வரும்போது இலங்கையானது ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட, குழப்பமான, கல்வி முதல் சட்டவாக்கல் வரையிலான பரந்த விவகாரங்களையே பற்றிக்கொண்டிருப்பதைக் குழுவினர் குறித்துக்காட்டினர்.

தொழில் உலகத்தின் பரிணாம வளர்ச்சியை தொழிநுட்பம் துரிதப்படுத்தும் இக்கணத்தில், இளையோர் மாற்றங்களை முன்நகர்த்துகின்றனர்.

 "இளைஞர்களே தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதில் முன்னிற்பதே எமக்குத் தேவை. அவர்கள் கொள்கைகளை உருவாக்குவோரையும்,தனியார் துறை மற்றும் பொதுத்துறையினரையும் தமக்கான வழியிலுள்ள தடைகளைத் தளர்த்துவதில் அவர்கள் அழுத்தி அதன் மூலம் நாளைய தொழில்தருனர்களாகவும் கண்டுபிடிப்பாளர்களாகவும் மாறுவதை நாம் எதிர்பார்க்கிறோம். " என்று உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிப்பாளர் Dr.இடா  Z. ஸ்வராயி-ரிட்டிஹோ தெரிவித்தார்.

இலங்கை அதன் ஏற்றுமதிகளை அதிகரிக்க முனைகின்ற வேளையில், நாட்டின் தொழில்சக்தியானது உலகத்தின் போட்டியாளர்களுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.

SLDUவின் ஆசிரியர்களில் ஒருவரும் சிரேஷ்ட பொறியியலாளருமான ரல்ப் வான் டூர்ன் "நாம் நினைக்கிறோம் வேலைக்கான நிகழ்ச்சி நிரல் போட்டித்தன்மைகொண்ட நிகழ்ச்சிநிரல் என்று - போட்டித்தன்மை கொண்டவராக மாறுவதன்மூலம் மேலும் அதிகமான மேலும் சிறப்பான தொழில்வாய்ப்புகளை உருவாக்குகிறீர்கள்" எனக் குறிப்பிட்டார்.

கீழ்க்காண்பவை - பொருளாதார நிபுணர் கித்மினா ஹேவகேயினால் மட்டுறுத்தப்பட்ட ஒரு மணிநேர நீளமான குழுவினர் கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்.


Image

Photo Credit: World Bank


பெண்களினதும் இளையோரினதும் ஆற்றலை உணர்ந்திடல்

இலங்கை தன்னுடைய தொழிலாளர் வலிமைக்குப் பொருத்தமான, முக்கியமாக இளையோர் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கவேண்டிய தேவை இருப்பதை  SLDU கவனித்துள்ளது.  2017இல், 15-24 வயதுக்கிடைப்பட்டோரின் வேலையில்லா வீதம் 18.5 ஆக இருந்தது- ஒப்பீட்டளவில் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் 0.9 வீதமாக இருந்தது.

மற்ற எல்லா வயதுப்பிரிவிலும் ஆண்களை விட பெண்கள் வேலைவாய்ப்பின்மையின் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

"எங்கள் மூன்றாம் தரநிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ள விதத்தில்,சந்தைகளில் இடம்பெறும் மாற்றத்துக்கேற்ப விரைவாக எதிர்வினையாற்ற முடியாது. சந்தையின் தேவைக்கு ஏற்ப பட்டதாரிகளை உருவாக்கும் புதிய மாதிரிகளை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது" என்கிறார் கொள்கைக் கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளராக கலாநிதி.நிஷா அருணாதிலக. அத்துடன் தனியார் துறைக்கான வகிபாகத்தைக் கண்டறிவதானது கல்வித்திட்டத்தில் வளங்களை ஊட்டுவதோடு புதுமைகளை இயங்குவதாகவும் அமையும் என்ற தனது எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டார். இது சமத்துவ நிலையையும் அனைவருக்கும் கல்வி கிடைப்பதையும் உறுதிப்படுத்தும் வண்ணமே நடைபெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

 திறந்த பல்கலைக்கழகம் மற்றும் மொறட்டுவை பல்கலைக் கழகம் ஆகியவற்றின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர்.தயாந்த விஜேசேகர, முன்பு பிரபலமாக விளங்கிய தொழிற்பயிற்சி திட்டத்தை மீள அறிமுகப்படுத்தவும், பாடநெறிகளின் அனுமதிக்கான அடிப்படைகளை மேலும் நெகிழ்வுத்தன்மையுடன் அமைக்குமாறும் இதன்மூலம் மாணவர்கள் தங்கள் தகைமைகளில் புதிய செயற்திறன்கள் மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள பல்கலைக்கழகங்கள் உதவும் எனப் பரிந்துரைத்தார். "உள்ளகக் கட்டமைப்புக்களுக்காக நாம் அதிக பணத்தைச் செலவிடுவதை விட, தற்போதுள்ள தொழிற்கல்வி பயிற்சிகளுக்கு மேலதிகமாக இளையோரைக் கவரும் மேலதிக மற்றும் புதிய வழிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் " என மேலும் குறிப்பிட்டர்.

"இப்படியான சீராக்கங்கள் சகல மட்டத்திலும் உள்ள இளையோருக்கு உதவும் அதே நேரம், தொழில் சக்தியில் பேர்கள் இணைந்துகொள்வதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் தேவைப்படும். தரமான மானியங்கள் அல்லது சமூக ரீதியாக நிதியுதவி நல்கப்படும் சிறுவர் பராமரிப்பின் விரிவுபடுத்தல் முக்கியமானது "என்றார் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் பூகோள பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவரான கணேஷன் விக்னராஜா. வேலைத்தளங்களிலும் பொதுப் போக்குவரத்துக்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவுகளின் மட்டம் அதிர்ச்சி தருவதாகவும் இதை எதிர்த்து உறுதியானதும் கருத்திற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை அரசினாலும் தொழில் தருனர்களாலும் எடுக்கப்படவேண்டும் என்றும் மேலும் கேட்டுக்கொண்டார்.

சிக்கல்களை உருவாக்கும் சட்டரீதியான மற்றும் கொள்கைரீதியான தடைகளை எதிர்கொள்ளுதல்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் விதமாகவும் இலங்கையின் வர்த்தக சூழலை முன்னேற்றும் விதமாகவும் இலங்கையின் சட்ட விதிகளை மேம்படுத்தவேண்டும். "தொழிலாளர் சட்டக்கோவைகளில் சீர்த்திருத்தம் வருவது அவசியம்" என்று இலங்கை ஊழியர்களின் சம்மேளனத்தின், கைத்தொழில் உறவுகள் ஆலோசகரான யோமி பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். அத்துடன் தற்போதிருக்கும் சம்பந்தப்பட்ட சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான முயற்சிகளும், அவற்றை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றில் சில 1950கள் வரை  பழமையானவை என்றும் குறிப்பிட்டார்.

"அவற்றில் சில தொழில்சார் தலைமுறைக்கு வேறு தொழில்களுக்கு மாறும்போது மாபெரும் தடைகளை ஏற்படுத்தக்கூடியளவுக்கு ஆபத்தானவை" என்றும் குறிப்பிட்ட அவர்,இதனால் முதலீட்டாளர்கள் இயற்கையாகவே விலகிடுவார்கள் என்று விளக்கினார்.

இந்த சட்டங்கள் எவையும் நவீன சந்தையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவையன்று. உதாரணத்துக்கு பல உள்ளூர் அலுவலகங்கள் இப்போது வேறு  வலயங்களிலுள்ள சகாக்களின் வேலை நேரங்களுக்கேற்ப தங்கள் அலுவலக நேரங்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள், மேலதிகக் கொடுப்பனவுகள் இன்றி. பகுதி நேர வேலைகளுக்கு முனைவோரும், சுயாதீன தொழிலாளரும் அதிகரித்துவருவதும், வீடுகளில் இருந்து பணிபுரிய விரும்புவோரது எண்ணிக்கை கூடிவருவது பற்றி சரியாக்க கவனிக்கப்படாததும் ஊழியர்களுக்கும் தொழில் தருனர்களுக்கும் சவால்களை உருவாக்கியுள்ளது.

இதேவேளை,இலங்கையின் பாரிய முறைசார் தொழில்சார் பிரிவின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்  முறைப்படுத்துவதற்கு ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்ட ரல்ப், இதன் பிரதிபலனாக நிறுவன ஆதரவு கிட்டக்கூடியதாகவும் இருக்கும் அதேநேரம், சந்தைத் தொடர்புகள் மற்றும் நிதியியல் உதவிகளும் கிட்டுவதால் வளர்ச்சிக்கு உதவும்.

ஆய்வுகளின்படி 60 வீதமான தொழில்செய்வோர் முறைசாரா தொழில் ஏற்பாடுகளில் பணியாற்றுவதாகக் கணிப்பிடப்படுகிறது. இங்கே சீர்திருத்தங்கள் ஊழியர்களை தொழில் சட்டங்களின் நீட்சிக்கு ஏற்பப் பாதுகாப்பதில் உதவும்,.

அதிகம் பாதிப்படையக்கூடியவர்களை பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை வடிவமைத்தல்

உலகின் மிக வயதேறிக்கொண்டு செல்லும் நாடுகளில் ஒன்றாகக் காணப்படும் இலங்கை எதிர்காலத்தில் சம்பாதிப்பவர்கள் குறைவாகவும், தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்தளவில்  கூடிய ஒரு சிக்கலான சனத்தொகை மாற்றம் உருவாகிவருகிறது. வேலை தேடுவோருக்கு ஓய்வூதியங்கள் ஒரு முக்கியமான காரணியாக இருப்பதை அடிக்கோடிட்ட கணேஷன், இதற்கான பயனுள்ள மாற்றுவழியொன்றை தனியார்துறையில் உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, தனியார் ஓய்வூதியங்களை வழங்குவோர் இலங்கையில் தம் வர்த்தகத்தை ஆரம்பிக்க அனுமதிக்கவேண்டியதையும் வலியுறுத்தினார்.

ரல்ப் பொதுத்துறைக்கு மட்டும் சார்பாக இருக்கின்ற  ஓய்வூதிய நடைமுறையை விரிவுபடுத்தி படிப்படியாக முறைசாரா தொழிற்துறையில் இருக்கும் ஊழியர்களை பாதுகாப்பதாக மாற்றவேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் இப்போதிருக்கும் சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் போதுமான முழுமை காணவில்லை என்பதோடு இன்னும் நேர்த்தியாக  இலக்குப்படுத்தப்படவேண்டும் என்பதை குழுவினர் ஏற்றுக்கொண்டனர். தற்போது, இளைப்பாறுகின்ற நேரம் தனியார்துறை ஊழியர்கள் போதுமானதாக இல்லாத  ஓய்வூதிய நன்மைகளை, ஒன்றில் இளைப்பாறும் நேரம் மொத்தமாகக் கிடைக்கும் ஒரு பெருந்தொகை, அல்லது  ஓய்வூதியமே இல்லாத நிலையே இருக்கிறது.

" ஓய்வூதிய சீர்த்திருத்தமானது,நமக்கு வயதாகும் போது, முதலாவது பெரிய விவகாரமாக மாறும், அல்லது இந்த நாடு முதிர்ந்த வயதில் வறுமையை சந்திக்கும் பெரிய நெருக்கடி நிலைக்குள்ளாகும் " எனக் குறிப்பிட்டார் கணேஷன்.

பாலின வேறுபாடு என்ற விடயம் இங்கே புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது என அயோமி எச்சரித்தார் "நாம்  ஓய்வூதியம் பற்றி எதிர்கொள்ளும் மிக முக்கியமான விடயம் அது உத்தியோகத்தோடு தொடர்புபடுள்ளது; ஆனால் இங்கே 50 வீதமான பெண்கள் எப்போதுமே தொழில்புரிவதில்லை. எனினும் ஆண்களை விட அதிக காலம் வாழ்பவர்கள் அவர்களே. ஆண்களை விட எட்டாண்டுகள் அதிகமாக வாழ்கின்றனர். அத்துடன்  ஓய்வூதியங்கள் பெறமுடியாமல் இருப்பதும் அவர்களே. எனவே  ஓய்வூதிய சீர்திருத்தங்கள் தொழிற்துறையிலிருந்து ஓய்வூதியத்தை தொடர்பறச் செய்யவேண்டும்"

முடிவில், பொதுத் துறையோ அல்லது தனியார் துறையோ தனித்து பொருளாதாரத்தை மீட்க முடியாது என்பதை குழுவினர் ஏற்றுக்கொண்டனர். "நிதியியல் கல்வியறிவைக் கட்டியெழுப்புவதோடு மக்களை அவர்களது முதிர்ந்த வயதுக்கு திட்டமிட ஊக்குவிக்கவேண்டும்" என்ற விக்னராஜா, "அரசாங்கமே எல்லாவற்றையும் செய்ய முடியாது.  இப்போது நாமிருக்கும் நுண்பொருளாதார நிலையில் அது முடியாது. மக்கள் இந்த யதார்த்தத்தில் விழித்துக்கொள்ளவேண்டும் என நான் நினைக்கிறேன்" என நிறைவுசெய்தார்.



Api
Api