Skip to Main Navigation
Results Briefs செப்டம்பர் 14, 2018

இலங்கையின் சுகாதார துறையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துதல்

Image


“With support from the World Bank and other partners, we have been able to improve the quality of health services through providing emergency services that treat 10 to 12 patients per day for traffic accidents and poisonings. An electronic registration and records system have also reduced wait times for patients from two hours to one hour for most care. Before, patients had to go to Kandy for emergency care, but they can now come to our district level hospital which now have the facilities and staff training to help them.” -Dr. Shaminder Weerakoon, Hospital Head for the District Base Hospital Theldeniya in Central Province

Joe Qian/World Bank


முழு இலங்கையர்களையும் உள்ளடக்கிய சுகாதார அமைப்பின் மூலம் சுகாதார குறிகாட்டிகளில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இருந்த போதிலும் இலங்கை சுபீட்சமிக்க நாடாக மாறிவரும் போதிலும் அதன் மக்கள் நீண்டகாலமாக ஆரோக்கியமாக வாழும் நாடாக மாறியுள்ள போதிலும் தொற்றாத நோய்களான இதயநோய், , புற்றுநோய் போன்றன அதிகரிக்கின்றன. இதன் காரணமாக இந்த சவால்களிற்கு தீர்வை காணக்கூடிய விதத்தில் சுகாதார அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்.இந்த சவால்களிற்கு பதில் அளிப்பதற்காக உலக வங்கி சுகாதார அமைச்சிற்கு தரத்தையும் சுகாதார நிலையங்களை முகாமைத்துவம் செய்வதையும் மேலும் முன்னேற்றுவதற்கு உதவுகின்றது.மேலும் விபத்துக்களையும் அவசரநிலைமைகளையும் சிறப்பாக கையாள்வதற்கும் தொற்றாத நோய்களை இனம் கண்டு தடுத்து சிகிச்சையளிப்பதற்கான ஆரோக்கிய சுகாதார நிலையங்களை அமைப்பதற்கும் உதவுகின்றது.

சவால்கள்

இலங்கை குறைந்த நடுத்தர வயதுடைய நாடு என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் சுகாதார துறைகளிலும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்துவதிலும்  மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது.கர்ப்பிணி தாய் இறப்பு வீதம் 100,000 பிறப்புகளில் 33.8 வீதமாக காணப்படுகின்றது. பிறந்த குழந்தைகளின் இறப்பு வீதம் 1000ற்கு 9 வீதமாக காணப்படுகின்றது.சராசரி நபர் ஒருவரின் வாழ்க்கை ஆயுள்காலம் 75.3 வீதமாக காணப்படுகின்றது.தென்னாசியாவை பொறுத்தவரை இந்த புள்ளிவிபரங்கள் மிகச்சிறந்தவை.

சுகாதார சேவைகளை பரந்துபட்ட அளவில் பெறக்கூடியதாக உள்ளமையும் பொருளாதார செழிப்பு அதிகரிப்பும் இலங்கையின் சனத்தொகை வயதில் மக்கள் தொகை மற்றும் நோய்கள் தொடர்பான மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தொற்றாநோய்கள் அதிகளவிற்கு காணப்படுகின்றது. ஆபத்தானைவயும்  ( நீரிழிவு புற்றுநோய்,இதயநோய்,மனநல சுகாதாரம்,) மற்றும் கடுமையான நோய்கள் விபத்துக்களை காணமுடிகின்றது.

இதேவேளை நாடு தொடர்ந்தும் காசநோய், டெங்கு ,இன்புளுவன்சா போன்ற தொற்று நோய்களையும் எதிர்கொண்டுள்ளது.அதேவேளை தாய்மார் மற்றும் குழந்தைகள் மத்தியிலான மந்தபோசனையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை ஒரு வருட காலத்தில் பிறக்கும் குழந்தைகளில் 16.8 வீதமானவை குறைந்த எடையுடன் பிறக்கின்றன.மேலும் ஐந்து வயதிற்கு உட்பட குழந்தைகளில் 17 வீதமானவர்கள் மிகவும் உயரம் குறைந்தவர்களாகவும் வளர்ச்சி குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். நாட்டின் பொது சுகாதார சேவை இலங்கையின்  50 வீத மருத்துவசிகிச்சையையும்,95 வீதமான மருத்துவசதிகளையும்,99 நோய்தடுப்பினையும் வழங்குகின்றது. இதன் காரணமாக இலங்கையின் சுகாதார அமைப்பின் வினைத்திறனையும் தரத்தையும் முன்னேற்றுவது   அனேக இலங்கையர்களிற்கு பயனளிப்ப்பதற்கும் மிகமுக்கியமான விடயமாகும்.


Image
Pharmacists preparing medication for patients. Over 80% of Sri Lanka's Primary Care Facilities now have an ample supply of 16 essential drugs to treat NCDs.


Image
75.3 years

life expectancy for the average Sri Lankan.


தீர்வு

இந்த சவால்களிற்கு தீர்வை காண்பதற்காக இலங்கையின் தேசிய சுகாதார திட்டத்திற்கு உலக வங்கி உதவுகின்றது.இது தொழில்நுட்ப நிதி உதவிகள் மூலம் சுகதார துறையை நடுத்தர வருமான நாடுகளின் தராதரத்திற்கு உயர்த்துவதை நோக்கமாக கொண்டது.இது பொதுசுகாதார அமைப்பின் செயற்பாடுகளின் தராதரங்களை தரமுயர்த்துவதையும்,மந்தபோசனம் மற்றும்  தொற்றா நோய்களின் சவால்களிற்கு முகம்கொடுப்பதற்கு சிறப்பாக நோக்கமாக கொண்டது. 

பின்வரும் விடயங்களில் முன்னேற்றம் காண்பதன் மூலம் இதனை சாதிக்கலாம்

  • தாய் மற்றும் குழந்தை சுகாதாரபராமரிப்பின் தரம்
  • ;சிறந்ததும் அதிகமானதுமான அவசரசேவையினை வழங்குதல்
  • தொற்றா நோய்களை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
  • சுகதாதார துறையில் புத்தாக்கம் பெறுபேறுகளைக் கண்காணித்தல் மற்றும் திறனை வளர்த்தல்

இந்த திட்டம் இலங்கை அரசாங்கம் வளர்ந்தோரின் மத்தியில் தொற்றா நோய்களின் ஆபத்துகள் குறித்தும் ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டுபிடிப்பது கையாள்வது குறித்தும் விழிப்புண்ச்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கின்றது.கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஐந்து வயதிற்கு உட்பட குழந்தைகளிற்கு சிறந்த பராமரிப்பினை வழங்குவதை முன்னேற்றகரமானதாக்குதவதற்கு இது ஆதரவளிக்கின்றது.-சுகதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் சுகாதார துறை பணியாளர்கள்  திறன் விருத்தி திட்டங்கள் மூலம் பலனை பெற்றுள்ளனர் இது அவர்கள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக செய்வதற்கு உதவியுள்ளது.


Image
“I’ve worked here for 20 years and I’ve seen a big difference in terms of the quality of care for patients and accountability of our service as the hospital has transitioned from a district to Base Hospital.” -Sister Sharma (on the right), Nurse of the District Base Hospital Theldeniya in Central Province.

முடிவுகள்

  • இரண்டாவது சுகாதார துறை அபிவிருத்தி திட்டம் இலங்கை போசனை மற்றும் தொற்றா நோய்கள் போன்ற  மேலதிக கவனம் தேவைப்படும் சுகாதார பிரிவுகளில் இலங்கை முன்னோக்கி நகர்வதற்கு உதவியுள்ளது.இதற்கு அப்பால் இந்த திட்;டம் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள சுகதார பணியாளர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் மேலும் தரமுயர்த்திக்கொள்வதற்கும் உதவியுள்ளது. மேலும் தேசிய சுகாதார அபிவிருத்தி திட்டத்திற்கு ஆதரவளிக்கும் 20 குறிகாட்டிகள் மூலம் சுகாதார சேவையின் விளைத்திறனையும் தரத்தையும் உயர்த்துவதற்கும் உதவியுள்ளது.ஐந்து வருட அமுல்படுத்தலிற்கு பின்னர் இந்த திட்டம் செப்டம்பர் 2018 இல் முடிவிற்கு வருகின்றது. இதுவரை இந்த திட்டம்
  • நாடு முழுவதிலும் உள்ள 40,000 சுகாதார நிலையங்களிற்கு சிறந்த தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகளை வழங்குதவற்கான சாதனங்களையும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.
  • மருத்து அதிகாரிகள் தலைமையிலான சுகாதார போசனை சமூக குழுக்கள் குழந்தைகளிற்கு பாலூட்டுதல் உடற்பயிற்சி ஆலோசனை போன்ற சுகாதாரத்துடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உதவியுள்ளது.
  • சுகாதார பகுதிகளிற்கு பத்தில் ஆகக்குறைந்தது 9 சுகாதார அதிகாரிகளை வழங்கியதன் மூலமும்- அடிப்படை சமூகங்களிற்கு தடுப்பு மற்றும் பொதுசுகாதார சேவைகளை வழங்கியதன் மூலமும்- தொற்றா நோய்களை கண்டுபிடிப்பது மற்றும் ஆலோசனைகளை வழங்குவது என்பவற்றிற்கான இரண்டு ஆரோக்கியமான வாழ்க்கை நிலையங்களை  ஏற்படுத்தியதன் மூலமும் தொற்றநோய்களை கண்டுபிடிப்பதற்கான சுகாதார அமைப்பின் திறனை மேலும் விஸ்தரித்தது
  • 849 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 81 வீதமானவை  தொற்றா நோய்களிற்கான 16 அடிப்படை மருந்துகளை வைத்திருப்பதற்காக அவற்றை தொடர்ச்சியாக விநியோகித்ததன் மூலம் தொற்றநோய்களிற்கான சிகிச்சைகள் கிடைப்பதை மேலும் அதிகரித்தது
  • அங்கவீனர்களிற்கான புனர்வாழ்வு சேவைகளிற்கான தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்கியது.9 மாகாணங்களில் 8 மாகாணங்களுக்கு இந்த சேவைகளை வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.
  • மருத்துவமனைகளின் ஆய்வுகூடங்களிற்கு  திறமை வாய்ந்த மேற்பார்வைகளை வழங்கியது.இதன் மூலம் இன்று 95.7 வீதமான மருத்துவமனைகள் மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்டஆய்வு கூட பரிசோதனைகளிற்கான தர உறுதிப்பாட்டு திட்டத்தினை பின்பற்றுகின்றோம்.
  • விபத்துகள் மற்றும் அவசரசேவைகளை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களையும் கொள்கைகளையும் உருவாக்க உதவியது.இதன் மூலம் தகுதியான அவசர சேவை பிரிவுகளை கொண்ட மத்திய மற்றும் மாகாண மருத்துவநிலையங்களின் எண்ணிக்கையை 10 வீதத்திலிருந்து 46 வீதமாகவும் 20 வீதத்திலிருந்து 70 வீதமாகவும் மாற்ற முடிந்துள்ளது.
  • மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகள் நாட்டில் நோய்த்தாக்கத்தின் அளவு மற்றும் பிறப்பின்போது குழந்தை இறப்பு போன்றவற்றை தொடர்ச்சியாகவும் இலத்திரனியல் முறைகள் ஊடாகவும் அறிவிப்பதை உறுதி செய்ததன் மூலம் சுகாதார கொள்கை மற்றும் நிர்வாகிகள் தேவையான சுகாதார தேவைகள் குறித்து சிறந்த முறையில் அவதானித்து தி;ட்டமிவதற்கு உதவியது.
  • மருத்துவமனைகளில் தரங்களை உயர்த்துவதை நோக்கி கவனத்தை திருப்பியது.-நோயாளிகளின் திருப்தியை அதிகரித்தல்,காத்திருக்கவேண்டியநேரத்தை குறைத்தல்,சிறந்த தொற்றுகட்டுப்பாடு-மருத்துவமனைகளின் தர முகாமைத்துவ பிரிவுகளிற்கான கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கியதன் மூலமும் மத்திய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படு;ம் மருத்துவமனைகள்  100 வீதமும் மாகாண சபைகளினால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளில் 91 வீதமும் முழுமையாக செயற்படும் தர முகாமைத்துவ பிரிவுகளை ஏற்படுத்தியதன் மூலமும் இதனை சாதிக்க முடிந்துள்ளது.

Image
Patients now have more access to services throughout hospitals across Sri Lanka.

 

வங்கி குழும பங்களிப்பு

உலவ வங்கி சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் International Development Association (IDA)200 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றது. 190 மில்லியன் டொலர்கள்  பகுதி -1ற்கு வழங்கப்படுகின்றது.இது  தேசிய சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீட்டு குறிகாட்டிகளினால் முன்வைக்கப்படும் முன்னுரிமை விடயங்களிற்கு நிதி உதவியை வழங்குனின்றது.  புதுமுறை காணல் முடிவுகளை கண்காணித்தல்,மற்றும் திறன் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் பகுதி 11ற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதுவரை 87.62 வீத நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது, செப்டம்பர் 2018 இல் இந்த திட்டம் பூர்த்தியாவதற்குள் முழுமையான ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பங்காளிகள்

சுகாதார அமைச்சு , உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம்

முன்னோக்கி நகருதல்

இலங்கை அரசாங்கம், உலக வங்கியை செப்டம்பர் 2018ற்கு பின்னரும் நாட்டின் சுகதார துறையில் ஈடுபாட்டை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது-நாட்டு ஒத்துழைப்பு கட்டமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க( 2016-20)IBRD கடன் உதவியுடன். இதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு அமைப்பினை வலுப்படுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அது செப்டம்பர் 2018 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.உலக வங்கியின் நிதி உதவிக்கு இலங்கை அரசாங்கமும் ஆதரவு வழங்கும்.ஆரம்ப சுகாதார சேவையின் பயன்பாட்டையும் தரத்தையும் அதிகரிப்பதே திட்டத்தின் நோக்க இலக்காகும்.நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ள மக்கள் குழுவினர் மத்தியில் அதனை கண்டுபிடித்து கையாள்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.இந்த திட்;டம் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதுடன் கொள்கைகள்,தராதரங்கள்,மற்றும் பலவகையான ஆதரவு அமைப்புகளை பலப்படுத்துதல் போன்றவற்றையும் முன்னெடுக்கும்.எதிர்காலத்தில் மேலும்; ஒருங்கிணைக்கப்பட்ட மக்களை அடிப்படையாக கொண்ட சேவை வழங்குதலை முன்னெடுப்பதற்கு இந்த திட்டம் அடித்தளமிடும்.

பயனாளர்கள்

'உலக வங்கியினதும் ஏனைய சகாக்களின் ஆதரவுடனும் எங்களால் சகாதார சேவையின் தரத்தை அதிகரிக்க முடிந்துள்ளது,விபத்துகள் மற்றும் நஞ்சுகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட 10 முதல் 12 வரையிலான நோயளிகளிற்கு நாளாந்தம் சிகிச்சை வழங்குகின்றோம். இலத்திரனியல் பதிவு மற்றும் ஆவணப்படுத்தல் முறை ,நோயாளிகள் காத்திருக்கவேண்டிய காலத்தை  இரண்டு மணித்தியாலாத்திலிருந்து ஒரு மணித்தியாலமாக குறைத்துள்ளது.முன்னர் அவசர மருத்துவசிகிச்சைக்காக நோயாளிகள் கண்டிக்கு செல்லவேண்டிய நிலை காணப்பட்டது,ஆனால் தற்போது அவர்கள் எங்கள் மாவட்ட வைத்தியசாலைக்கு வரலாம் இது அவர்களிற்கு உதவுவதற்கான வசதிகளையும் பணியாளர்களையும் கொண்டுள்ளது.'- மருத்துவர் சமிந்தர் வீரக்கோன் ,மத்தியமாகாணத்தின் தெல்தெனிய மருத்துவமனையின் தலைவர்

"நான் இங்கு 20 வருடங்களாக பணியாற்றியுள்ளேன்,எங்கள் மருத்துவமனை மாவட்ட வைத்தியசாலையாகயிருந்து ஆதாரவைத்தியசாலையாக மாற்றம்பெற்றதை தொடர்ந்து நோயளிகளை பராமரிப்பதிலும் எங்கள் சேவைகள் குறித்த பொறுப்புக்கூறலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நான் பார்த்திருக்கின்றேன்."- மருத்து தாதி சர்மா ,மத்தியமாகாணத்தின் தெல்தெனிய மருத்துவமனை

முக்கிய சொற்கள்

தொற்றா நோய்கள்,தாய் சேய் சுகாதாரம்,சுகாதார சேவை முன்னேற்றம்

மேலும் அறிந்துகொள்ளுங்கள்

https://www.worldbank.org/en/news/feature/2015/04/02/combating-non-communicable-diseases-health-promotion-prevention 

https://blogs.worldbank.org/endpovertyinsouthasia/prevention-better-cure

பல்லூடகம்

தோட்டத்துறையின் போசாக்கு தொடர்பாக ஆராயும் வீடியோவொன்று உலகவங்கியின் இணையத்தளத்தில் காணப்படுகின்றது.மேலும் இதற்கான விஜயத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணப்படுகின்றன

https://www.worldbank.org/en/country/srilanka/publication/tackling-chronic-undernutrition-in-sri-lankas-plantations

 

https://www.youtube.com/watch?v=4Wei3LToGmQ