Skip to Main Navigation
செய்தி வெளியீடுஏப்ரல் 2, 2024

இலங்கையின் பொருளாதாரம் உறுதியாக இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்ட பொழுதிலும், வறுமை உயர்வாகவே காணப்படுகின்றது

கொழும்பு, ஏப்ரல் 2, 2024 – 2024 இல் இலங்கையின் பொருளாதாரம் 2.2% ஆன வளர்ச்சி காணலாம் என எதிர்வு கூறப்பட்டது, உறுதியாக திகழ்வதற்கான அறிகுறிகளை காட்டியது, 2022 இல் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் இது ஏற்பட்டது. இருப்பினும்,  உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழில் சந்தை அக்கறைகள் ஆகிய பிரச்சினைகளை நாடு முகங்கொடுத்து வருவதாக உலக வங்கியின் அண்மைய அரையாண்டு அறிக்கை இற்றைப்படுத்தல் தெரிவிக்கின்றது.

இன்று வெளியிடப்பட்ட இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீண்டெழலுக்கான பாலம் என்ற வெளியீட்டில் இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும், புதிய அரசிறை கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்புலத்தில் அதிக வருமானங்கள் காணப்படுவதாகவும், சுமார் ஐந்து தசாப்த காலப் பகுதியில் முதன் முதலாக நடைமுறைக் கணக்கில் மிகை ஏற்பட்டுள்ளதாகவும், பண அனுப்புதல்கள் அதிகரித்துள்ளதாகவும், சுற்றுலாத் துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 25.9% ஆன இலங்கையர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வசிப்பதாக மதிப்பிடப்பட்டது. தொழிற்படை பங்குபற்றுதலிலும் வீழ்ச்சி காணப்பட்டது, குறிப்பாக பெண்கள் மற்றும் நகர் பிரதேசங்களில் இது காணப்பட்டது, நுண், சிறிய, மத்திய அளவிலான நிறுவனங்கள் (MSME) மூடப்பட்டதனால் இந்த பிரச்சினை அதிகமானது. அதிக விலையேற்றம், வருமான இழப்புகள், போதிய வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக குடும்பங்கள் பல்வேறு அழுத்தங்களினால் துன்பப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக உணவுத் தேவைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வி சார்ந்த செலவுகளை சமாளிப்பதற்காக கடனை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை குடும்பங்களுக்கு ஏற்பட்டது.

இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் திசையில் பயணித்தாலும், ஏழைகள் மற்றும் பாதிப்புறும் நிலையில் வாழுகின்ற மக்கள் ஆகியோர் மீது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்காக உறுதியான முயற்சிகள் முக்கியமானவை, இதனுடன் காத்திரமான, நம்பகமான, கட்டமைப்பு சார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் தொடரப்பட வேண்டும் என மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் நாட்டு பணிப்பாளர், பாரிஸ் ஹடாட் ரெஸோஸ் (Faris Hadad-Zervos) தெரிவித்தார். “இது இரு விதமான உபாயமுறைகளை கொண்டுள்ளது: முதலாவதாக, பேரினப் பொருளியல் உறுதித் தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்ற மறுசீரமைப்புகளை பேணுதல் மற்றும் இரண்டாவது, தனியார் முதலீடுகளை தூண்டக் கூடிய மற்றும் முதலீட்டு உள் வருகையை தூண்டக் கூடிய மறுசீரமைப்புகளை துரிதப்படுத்துதல், இவை பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியமாகும்.”

முன்னோக்கிப் பார்க்கையில், பண வீக்கத்தின் படிப்படியான அதிகரிப்புகள் மற்றும் சிறிய நடைமுறைக் கணக்கு மிகைகள் ஆகியவற்றினால் 2025 இல் 2.5% மத்திம வளர்ச்சியை அறிக்கை எதிர்வு கூறுகின்றது. எவ்வாறாயினும் அதிக கடன் சேவை கடப்பாடுகள் அரசிறை மிகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2026 வரை வறுமை விகிதங்கள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான இடர்கள் காணப்படும், குறிப்பாக கடன் மீள் கட்டமைப்பு போதாமைகள், மறுசீரமைப்புகளை மாற்றுதல், நிதித் துறை பாதிப்புறும் தன்மைகள், நெருக்கடியினால் ஏற்பட்ட தாக்கத்தை தாங்கிக் கொள்ளல் ஆகியன காணப்படும். தொடர்ச்சியான பேரண்ட அரசிறை நிதி ஸ்திரத்தன்மை, பாரியளவிலான தனியார் துறை முதலீடுகள், அரசிற்கு சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்புடைய இடர்கள் தொடர்பில் செயற்படல் ஆகியவற்றின் மூலம் மீண்டெழும் பொருளாதாரத்தை பேணுவதற்கு உறுதியான மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தல்கள் அடிப்படையானது என அறிக்கை வலியுறுத்துகின்றது.

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலானது தென் ஆசிய அபிவிருத்தி இற்றைப்படுத்தலின் தோழமை ஆவணமாகும், இது உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையாகும். இவ்வறிக்கை தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றை ஆராய்கின்றது. அத்தோடு நாடுகள் எதிர்கொள்கின்ற கொள்கை ரீதியான சவால்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றது. 2024 ஏப்ரல் பதிப்பில், மீண்டெழலுக்கான தொழில்கள் என்பதில் உலகில் துரிதமாக வளர்ந்து வரும் பிராந்தியங்களில் தென் ஆசியா காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2024 இல் 6.0% வளர்ச்சி எதிர்வு கூறப்பட்டுள்ளது. - இந்தியாவில் ஏற்பட்ட காத்திரமான வளர்ச்சி மற்றும் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் அறவீடுகள் பிரதான காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உறுதியான எதிர்கால வாய்ப்புகள் ஏமாற்றக் கூடியவைகள் என அறிக்கை கூறுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வளர்ச்சியானது தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கு முன்னரான நிலையில் காணப்படுகின்றது. அரச செலவுகளிலேயே தங்கியுள்ளன. அதே வேளை தென்னாசிய நாடுகளில் தனியார் முதலீட்டு வளர்ச்சிகள் வீழ்ச்சி கண்டுள்ளன மற்றும் துரிதமாக அதிகரித்து வரும் வேலை செய்யக் கூடிய வயதுடைய மக்களுக்கு ஏற்ற விதத்தில் தொழில்கள் இப்பிராந்தியத்தில் உருவாக்கப்படவில்லை. உறுதியான வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், வளர்ச்சியை அதிகரித்தல், உற்பத்தியை மேம்படுத்தல், காலநிலைக்கு சாதகமான விதத்தில் அரச முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு வகையான கோரிக்கைகளை அறிக்கை விதந்துரைக்கின்றது.

Image

Source: World Bank, Poverty & Equity and Macroeconomics, Trade & Investment Global Practices. Emissions data sourced from CAIT and OECD.

Notes: e = estimate, f = forecast.

(a)    Components of GDP by expenditure for 2020-2022 are estimates, as the data published on March 15, 2024, by authorities only included GDP by production.

(b)    Calculations based on SAR-POV harmonization, using 2019-HIES. Actual data: 2019. Microsimulation that models sectoral GDP growth rates, inflation, remittances, employment, and cash transfers 2020-2022. Nowcast and forecast (2023-2026) use nominal GDP growth rates by sector and CPI inflation.

தொடர்பு

வாஷிங்டனில்
டயானா சுங்
கொழும்பில்
புத்தி பிலிக்ஸ்கே

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image