வொஷிங்டன், டிசம்பர் 5, 2022: சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (IDA) சலுகை அடிப்படையிலான நிதியைப் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கையை உலக வங்கி இன்று அங்கீகரித்துள்ளது. குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்த வகையான நிதியுதவியானது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், வறுமை மற்றும் பட்டினியால் அவதிப்படும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் தலைமையிலான மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு உதவும்.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளில் தொடர்ச்சியான சீரழிவுகளானது, வருமான மட்டங்களை குறைத்து, வறுமை ஆதாயங்களை மாற்றியமைத்து, நிதிச் சந்தைகளுக்கான அணுகலைப் பாதித்ததன் விளைவாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிப்பின் அர்த்தம் இலங்கை இப்போது ஒரு IDA நாடாக மாறுகின்றது என்பதாகும்.
“இக்கட்டான இந்த நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எனவே அவர்களின் நாடு மீண்டு அதன் பொருளாதார நல்வாழ்வை மீட்டெடுக்க முடியும்" என்று உலக வங்கியின் அபிவிருத்தி நிதிக்கான துணைத் தலைவர் அகிஹிகோ நிஷியோ கூறினார். “வறுமையைக் குறைத்து, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்கும் மறுசீரமைப்புக்களை செயல்படுத்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி தயாராக உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
IDA ஆதரவின் ஊடாக, இலங்கை மீட்சி மற்றும் நாட்டின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான மறுசீரமைப்புக்களை, குறிப்பாக வறியவர்களை நோக்கிய நடவடிக்கைகளை அமுல்படுத்தும் போது, உலக வங்கி சலுகை நிதி, தொழிநுட்ப உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகளை வழங்கும்.
IDAஇன் சலுகை நிதியுதவிக்கான அணுகலானது IDA நிதியுதவியில் உள்ள சாதகமான விதிமுறைகளுக்கு அமைய தற்போதைய கடன் சேவை அழுத்தங்களைக் குறைக்கும். IDA நாடாக, இலங்கையும் IDA செயல்பாட்டுக் கொள்கைளைப் பின்பற்ற வேண்டும்.
“இலங்கையில் இந்த இக்கட்டான தருணத்தில், உலக வங்கியின் விரைவான பதிலையும், முதலாவது அபிவிருத்தி பங்காளியாக குறித்த நேரத்தில் தற்போதுள்ள செயற்பாடுகளை மீண்டும் அத்தியவசியத் தேவையிலுள்ள வேறு நோக்கங்களுக்கு நிதியை மாற்றியமைத்து இலங்கை நிறுவனங்களை அடிப்படை சேவை வழங்களுக்கு பாதுகாக்கும் உதவி புரிந்ததை நாம் பாராட்டுகிறோம்" என்று இலங்கையின் கௌரவ வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறினார். “IDAஇற்கான தலைகீழ் தரமளிப்பானது, இலங்கை மக்களின் தேவைகளுக்கு மிகவும் மீள்தன்மை மற்றும் பதிலளிக்கக்கூடியதாக மாறுவதற்கும் நிறுவனங்களை நிலைநிறுத்துவதற்கு உதவும் வளங்களை அணுகுவதற்கு எங்களுக்கு உதவும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டிலிருந்து IDAஇல் முதல் முறை தரமளிப்பு பெற்ற போது, இலங்கையானது உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியில் (IBRD) கடன் வாங்குவதற்கு தகுதியுடையதாக இருந்தது. இன்றுவரை, நாட்டின் நெருக்கடிக்கு விடையளிக்கும் வகையில், IBRD வங்கியிலிருந்து 325 மில்லியன் டொலர்களையும், அடிப்படை சேவைத் தேவைகளுக்கான நெருக்கடியை எதிர்கொள்வதற்காக மற்ற வழக்கமான வங்கி நடவடிக்கைகளிலிருந்து மேலும் 71 மில்லியன் டொலர்களையும் திரும்பப் பெற்றுள்ளது. இது மற்ற பலதரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள், இருதரப்பு நன்கொடையாளர்கள் மற்றும ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து ஒரு பொதுவான நெருக்கடி பதிலளிப்பு பொறிமுறையை ஆதரிக்க உதவியது.
இலங்கையின் தலைகீழ் தரமளிப்பு IDA நாடுகளின் மொத்த எண்ணிக்கையை 75 ஆகக் கொண்டு வருகிறது.
IDA ஐப் பற்றி: உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கமானது (IDA) உலகின் வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் கடுமையான வறுமையை எதிர்த்துப் போராடுவதற்கான மிகப்பெரிய நிதி ஆதரவுகளில் ஒன்றாகும். IDAஆனது, நிதியுதவிகளையும் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கும், நெகிழ்வுத் திறனை வளர்க்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள வறிய மற்றும் பூஜ்ஜியம் அல்லது குறைந்த வட்டி கடன்களை வழங்குகிறது. 1960 முதல், 114 நாடுகளில் முதலீடு செய்வதற்கு சுமார் 496 பில்லியன் டொலர்களை IDA வழங்கியுள்ளது.
இணையத்தில் IDA குறித்து மேலும் அறிவதற்கு: IDA.worldbank.org. #IDAworks
கடைசியாகப் புதிய தகவல் சேர்த்தது: டிசம்பர் 5, 2022