Skip to Main Navigation
செய்தி வெளியீடு செப்டம்பர் 30, 2021

இலங்கையில் விவசாயம்சார் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துவதற்கு பாதுகாப்பான, காலநிலைக்கு நெகிழ்வான போக்குவரத்து இணைப்பிற்கு உலக வங்கி உதவுகின்றது

வொஷிங்டன், செப்டம்பர் 30,  2021 – உள்ளடக்கமான இணைப்பு மற்றும் அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஊடாக விவசாயம்சார் விநியோகச் சங்கிலியை இணைப்பதற்கு பாதுகாப்பான, காலநிலை-நெகிழ்வான பாதைகளை வழங்குவதற்கு இலங்கைக்கான நிதியிடலாக 500 மில்லியன் டொலர்களை உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அங்கீகரித்தனர். இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் கிராம சமுதாயங்களில் வசிக்கும் 16 மில்லியன் மக்களுக்கு இந்த செயல்திட்டம் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில், வீதிகள் 95 வீதமான பயணிகளையும், 98 வீதமான சரக்குப் பொருட்களை காவிச் செல்கின்றன. அண்ணளவாக எல்லா தேசிய வீதிகளும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 67 சதவீதமான மாகாண வீதிகளும், 13 வீதமான கிராம வீதிகளும் மாத்திரமே சிறந்த நிலையில் உள்ளன.  வருடம் ஒன்றிற்கு 3,000 இறப்புகள் என்ற அடிப்படையில் தெற்காசியாவில் அதிகளவான வீதி விபத்துகள் இடம்பெறும் நாடாகவும் இலங்கை உள்ளது. சுகாதார, கல்வி சேவைகளுக்கும், ஏனைய பொருளாதார சந்தர்ப்பங்களுக்கும் கிராம சமுதாயங்களை இணைப்பதற்கும், சிறு விவசாயிகளை உள்ளுர் மற்றும் சர்வதேச சந்தைகளுடன் இணைப்பதற்கும் மிகவும் முக்கியமானதாக தடங்கலற்ற வீதி வலையமைப்பு உள்ளது.

”கிராமப் பகுதிகளில் அடிப்படை சேவைகளுக்கும், பொருளாதார சந்தர்ப்பங்களுக்கும் அணுகலை மேம்படுத்துதல், மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் பிராந்திய வேறுபாடுகளை களைதல் என்பன  அனைவருக்கும் உள்ளடக்கல் மற்றும் சந்தர்ப்பங்களை முன்னிறுத்தல் முக்கியமாகும்” என மாலைதீவுகள், நேபாளம், மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹதாத்-ஷெர்வோஸ் தெரிவித்தார். ”பல்வேறு குறுகிய-கால வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை இந்த செயல்திட்டம் உருவாக்குவதுடன், இது பெருந்தொற்றுக்குப் பின்னரான மீட்சியையும் மேம்படுத்தும்” என அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தின் கீழ் பிரதான செயற்பாடான, 100,000 கிலோமீற்றர் கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த செயல்திட்டம் உள்ளது.

”இந்த செயல்திட்டமானது பசுமையான, காலநிலைக்கு நெகிழ்வான போக்குவரத்து மற்றும் விவசாய ஏற்பாடுகளை உருவாக்க உதவும். அத்துடன், இலங்கைக்கான மேலும் நெகிழ்வான எதிர்காலத்திற்கான உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் முதலீடுகளில் முதன்மை காலநிலை நெகிழ்வு பயிற்சிகளுக்கும் உதவும்” என உலக வங்கியின் செயல்திட்டத்தின் குழு பிரதானி வின்னி வெங் தெரிவித்தார்.

உலக வங்கி நிதியளிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்பு மற்றும் உடைமை முகாமைத்துவ செயல்திட்டம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியளிக்கப்பட்ட ஒன்றிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சிகள் ஐரோட் I மற்றும் IIஇன் கீழ் தற்போதைய மாகாண மற்றும் கிராமப்புற வீதிகளின் புனரமைப்புச் செயற்பாடுகளுக்கு உதவும்.

நெடுஞ்சாலைகள் அமைச்சினால் இந்த செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், செயல்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்கான தேசிய செயல்குழு ஒன்று அமைக்கப்படும்.

புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியினால் (IBRD) 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்கப்படுகின்றது. மாறுபடும் பரவல் கடன் 10 வருட சலுகை காலம் உட்பட 28 வருட இறுதி முதிர்வு கொண்டது.


தொடர்பு

கொழும்பில்
டிலினிகா பீரிஸ்
dpeiris@worldbank.org
வொஷிங்டனில்
டியானா சங்
dchung1@worldbank.org
Api
Api