கொழும்பு, மே 25, 2021- விவசாயத்துறையை நவீன மயப்படுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய மானிய உதவிகுறித்த உடன்படிக்கையில் இலங்கையின் நிதி அமைச்சும் உலக வங்கியும் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளன. 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான திட்டத்திற்கு ஒத்துழைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 25மில்லியன் யூரோ உதவியின் ஓர் அங்கமாகவே இந்த மானியம் அமைந்துள்ளது.
விவசாய வினைத்திறனை அதிகரித்தல் விவசாயம்சார் வியாபாரங்களதும் சிறிய அளவிலான காணிகளில் விவசாயம் செய்கின்றவர்களதும்; பெறுமதி சேர்ப்பை அதிகரித்தல் சந்தைகளுக்கான அவர்களது அணுகலை மேம்படுத்தல் ஆகிய இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு விவசாயத்துறை நவீனமயப்படுத்தல் திட்டமானது 2016ம் ஆண்டின் ஆரம்பம் முதலே ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது.
இந்தத்திட்டமானது விவசாய பல்வகைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் ஆகியவற்றிற்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இந்தத்திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியல் 48,000ற்கும் அதிகமான சிறு உரிமை விவசாயிகள் ஏற்கனவே பயன்பெற்றுள்ளதுடன் விவசாயம் சார் வியாபார நிறுவனங்களில் முதலிட்டமை காரணமாக 1,500ற்கும் அதிகமான புதிய தொழில்களை உருவாக்கியுள்ளது.
' தொன்மையான வரலாற்று வேர்களில் ஆழப்பதிந்ததான விவசாயத்துறையைக் கொண்டதாக இலங்கை ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இது கிராமிய வாழ்வாதாரத்தில் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும் என்பதுடன் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களிலிருந்தும் நாடு எழுந்திருப்பதற்கு வழிகோலும் ' என இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சேர்வொஸ் தெரிவித்தார். ' இலங்கையின் பொருளாதாரத்திற்கு விவசாயமே மிகவும் முக்கியமானதாகும். விவசாய வினைத்திறன் விவசாயிகளின் வருமானம் மற்றும் விவசாயத்துறையில் தொழில்களை உருவாக்குதல் ஊடாக நாம் எமது சகல பங்காளர்களுடனும் இணைந்து அனைவரையும் உள்ளடக்குவதற்காகவும்; நெகழ்வுத்தன்மை உடனான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தொடர்ந்தும் நாம் பணியாற்றுவோம்.'
.
இந் ஏற்றுமதி வருவாய்க்கும் விவசாயம் சார் நடவடிக்கைகளில் உயர் தர தொழல்களை உருவாக்குதவற்கும் பங்களிப்பதனூடாக இந்த மேலதீக முதலீடானது இலங்கை கொவிட்-19 லிருந்து மீண்டெழுவதற்கு தயாராக இலங்கைக்கு உதவும். அத்தோடு கிராமிய பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கியதான வாழ்வாதார ஒத்துழைப்பிற்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்குவதற்குமான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துவதற்கு இது உதவும்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைத்துள்ள மேலதீக மானிய உதவியானது கண்டி (மத்திய மாகாணம்) பதுளை ( ஊவாமாகாணம்) அம்பாறை ( கிழக்கு மாகாணம்) கிளிநொச்சி மற்றும் வவுனியா ( வடக்கு மாகாணம் ) ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் விவசாயக் கொத்தணிகளை விரிவாக்கம் செய்வதற்கு துணைபுரியும்.
இந்தத்திட்டத்தின் விரிவாக்கமானது பாரியளவிலான வாழ்வாதார மாற்றத்தாக்கத்தை ஏறபடுத்துவதற்கும் பெரும் எண்ணிக்கையிலான பயனாளர்களைச் சென்றடைவதற்கும் வழிகோலும். வுpவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புக்களைச் சேர்ந்த 6,000 நேரடி அங்கத்தவர்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 25இ000 மேலதீக பயனாளர்களுக்கு இதன் மூலம் நன்மைகிட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
' மேலும் நின்றுநிலைக்கக்கூடியதும் மீண்டெழக்கூடிய நெகிழ்வுத்தன்மைமிக்கதும் வினைத்திறன்மிக்கதுமான விவசாயத்தை நோக்கி நகர்ந்துசெல்வதற்கு உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பங்காளராக செயலாற்றுவதையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சிகொண்டுள்ளது' என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சாய்பி தெரிவித்தார். வுpவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களிப்பதனூடாக நாம் சிறிய அளவிலான நிலத்தைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்கும் விவசாய வினைத்திறன் மற்றும் அதிகமான தொழில் உருவாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக புதிய விவசாய தீர்வுகளை முன்னோக்கிச் செல்வதற்காகவும் உதவுதே எமது நோக்கமாகும். இவையனைத்தும் மிகவும் நலிவடைந்த மக்களில் ஒருபகுதியினர் வாழ்வில் சாதகமான தாக்கத்தை நாம் அனைவரும் உண்டுபண்ணக்கூடியதாக இருக்கும்.'
உலக வங்கியின் இலங்கை தொடர்பான நடப்பு பணித்திட்டத்தில் தற்போதும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற 19 திட்டங்கள் அடங்கியுள்ளன. போக்குவரத்து நகரமயமாக்கம் விவசாயம் நீர் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய திட்டங்கள் அடங்கலான உலக வங்கியின் திட்டங்களுக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகையானது 2.33 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.
வறுமை ஒழிப்பு ஜனநாயக நிர்வாகம் உள்ளுர் அபிவிருத்தி விவசாயம் நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவை அடங்கலான பரந்துபட்ட திட்டங்களில் மறுசீரமைப்பு மற்றும் மீளக்கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளுக்கான உள்ளக முயற்சிகளுக்கு ஒத்துழைப்ப வழங்கவும் உறுதுணையாக நிற்கவும் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை இலங்கைக்கு 1 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான தொகையை மானியமாக வழங்கியுள்ளது.