வாஷிங்டன், ஜூலை 1, 2020 - திரு. ஃபரிஸ் ஹதாத்-செர்வோஸ் இன்றிலிருந்து மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியினுடைய நாடுகளின் புதிய இயக்குநராக செயல்படுகிறார். நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள துணை பிராந்திய அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டு, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கி ஆதரவை அவர் வழிநடத்துவார், தற்போதைய மொத்த முதலீடான சுமார் 5.5 பில்லியன் டாலர்களை அவர் மேற்பார்வையிடுகிறார்.
திரு. ஹதாத்-செர்வோஸ் திருமதி. ஐடா இசட். பிஸ்வராய்- ரிடிஹொவ் இற்கு பதிலாக பதவியேற்றார். அவர் உலக வங்கியினுடையய ஒரு புதிய செயல்திட்டத்தை மேற்கொள்வார். இதட்கு முன்னதாக அவர் நேபாளத்திற்கான உலக வங்கியினுடைய நாட்டு முகாமையாளராக பணியாற்றினார். ஒரு அமெரிக்க நாட்டவரான அவர் 1996 இல் உலக வங்கியில் சேர்ந்தார் மற்றும் மலேசியா மற்றும் பொலிவியாவினுடைய நாட்டு முகாமையாளராக பதவிகளை வகித்திருக்கிறார். வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் முகாமையாளராகவும், ஈராக்கிற்கான மிஷன் தலைவராகவும், மேற்குக் கரை மற்றும் காசாவின் செயற்பாட்டு முகாமையாளராகவும் இவர் பணியாற்றினார்.
திரு. ஹதாத்-செர்வோஸின் நியமம் இடப்பெற்றிருப்பது மூன்று நாடுகளின் அரசாங்கங்கள் கோவிட்-19 நெருக்கடியின் உடனடி மற்றும் நீண்டகால சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களை விரைவாக தீர்க்க வேண்டிய தருணத்திலாகும்.
திரு. ஹதாத்-செர்வோஸ் குறிப்பிடுகையில் ''கோவிட் -19 நெருக்கடியின் தாக்கங்களை நாடுகள் எதிர்த்துப் போராடுவதால், உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பது மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது.அத்தோடு எனது முதல் முன்னுரிமையானது, உலக வங்கி நிதியளிக்கும் திட்டங்கள் கோவிட்-19 இன் மூலமான சுகாதாரம் மற்றும் பொருளாதார தாக்கங்களைத் தணிக்க உதவுவதையும், வேலைகளை உருவாக்குவதையும், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தவதற்கு உதவுவதை உறுதி செய்வதாகும், மேலும் நான் அரசாங்கங்கள், வளர்ச்சிப் பங்காளர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் என்பவற்றோடு இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன் ” என்று குறிப்பிட்டார்
கோவிட் -19 அவசரகால பதிலளிப்பு திட்டங்கள் மூலம் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு தொற்றுநோயைத் தடுக்கவும், அதனை கண்டறிந்து ஈடுகொடுக்கவும், மற்றும் பொது சுகாதார தயார்நிலையினை வலுப்படுத்தவும் உதவுவதற்காக உலக வங்கியானது 350 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையினை வழங்கி ஆதரவளிக்கிறது.
###
பதிப்பாசிரியருக்கான குறிப்புகள் :
மாலைதீவு: மாலைத்தீவில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார முறை தயாரிப்புத் திட்டத்துடன் உலக வங்கி 7.3 மில்லியன் டாலர் தொகையினை தொற்றுநோயைத் தடுக்கவும், அதனை கண்டறிந்து ஈடுகொடுக்கவும், மற்றும் பொது சுகாதார தயார்நிலையினை வலுப்படுத்தவும் உதவுவதற்காக வழங்கியது. இதற்கு மேலதிகமாக பேரழிவு இடர் முகாமைத்துவ மேம்பாட்டுக் கொள்கை நிதியத்தின் கீழ் பேரழிவு ஒத்திவைக்கப்பட்ட வரைவுடன் 10 மில்லியன் டாலர் எதிர்பாராத இடர் நிதியுதவி மற்றும் 952,000டொலர் பெறுமதியான தொற்றுநோய் அவசர வசதி ஆகியவை மாலைதீவிற்கு ஆதரவளிப்பதற்காக கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீதான கோவிட் -19 நெருக்கடியின் பொருளாதார தாக்கத்தை தணிக்கவும், எதிர்கால அவசரநிலைகளுக்கு பதிலளிக்க சமூக பாதுகாப்பு திட்டங்களின் திறனை அதிகரிக்கவும், 12.8 மில்லியன் டொலர் கொண்ட கோவிட் -19 அவசரநிலை வருமான ஆதரவு திட்டம் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் உள்ள உலக வங்கி இலாகா தற்போது செயலில் உள்ள ஒன்பது திட்டங்களை தேறிய பொறுப்பாக 140.6 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 1 ஐடிஏ உத்தரவாத / நம்பிக்கை நிதியத்துடன் கொண்டுள்ளது.
நேபாளம்: கோவிட் -19 தொற்றுநோய்களின் உடனடி சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய 29 மில்லியன் டாலர் அவசரகால பதிலளிப்பு திட்டத்தின் மூலம் உலக வங்கி நேபாள அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் நெருக்கடியிலிருந்து எழும் தேவைகளைப் பூர்த்தி செய்ய தற்போதுள்ள முதலீட்டில் 20 சதவீதத்தை மறுசீரமைக்கிறது. கோவிட் -19 நெருக்கடிக்கு திறம்பட பதிலளிப்பதற்கான ஒரு நிவாரண, மறுசீரமைப்பு மற்றும் மீண்டெழும் திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக உலக வங்கி மற்ற பன்முக மேம்பாட்டு வங்கிகளுடன் சேர்ந்து ஒரு ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. உட்கட்டமைப்பு , மனித மேம்பாடு, நிதி மற்றும் ஆளுமை போன்ற அடிப்படை துறைகளில் சுமார் 3 பில்லியன் டாலர் தொகை கொண்ட செயலில் உள்ள 25 திட்டங்களை நேபாளத்தில் உள்ள உலக வங்கி இலாகா கொண்டுள்ளது.
இலங்கை: இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோய்க்கு இலங்கை கோவிட் -19 அவசரகால பதில் மற்றும் சுகாதார முறை தயாரிப்புத் திட்டத்தினுடாக உலக வங்கி 215 மில்லியன் டாலர் தொகையினை தொற்றுநோயைத் தடுக்கவும், அதனை கண்டறிந்து ஈடுகொடுக்கவும், மற்றும் பொது சுகாதார தயார்நிலையினை வலுப்படுத்தவும் உதவுவதற்காக வழங்கியது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கும்போது நாட்டின் தயார்நிலையை அதிகரிக்க 87.24 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி இதில் அடங்குகிறது. இலங்கையில் உலக வங்கி இலாகாவில் 2.3 பில்லியன் டொலர் தொகை கொண்ட போக்குவரத்து, நகர்ப்புற, நீர், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளடக்கிய 20 திட்டங்கள் உள்ளன.
நாங்கள் பொது சுகாதார தலையீடுகளை ஆதரிக்கிறோம், முக்கியமான பொருட்கள் மற்றும் உபகரணங்களின் ஓட்டத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்படுகிறோம், மேலும் தனியார் துறை தொடர்ந்து செயல்படுவதற்கும் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உதவுகிறோம். 100 க்கும் மேற்பட்ட நாடுகள் ஏழைகளையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்கவும், வணிகங்களை ஆதரிக்கவும், பொருளாதார மீட்சியை மேம்படுத்தவும் 15 மாதங்களுக்கு மேலாக 160 பில்லியன் டாலர் வரை நிதி உதவியை நாங்கள் பயன்படுத்துகிறோம். மானியங்கள் மற்றும் அதிக சலுகைக் கடன்கள் மூலம் 50 பில்லியன் டாலர் புதிய ஐடிஏ வளங்கள் இதில் அடங்கும்.