Skip to Main Navigation
செய்தி வெளியீடு ஏப்ரல் 1, 2020

கொவிட்-19னை எதிர்கொள்ள 128 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை இலங்கைக்கு விரைந்து வழங்கிய உலக வங்கி

வொசிங்டன், ஏப்ரல் 2, 2020- இலங்கை கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை தடுப்பதற்கும் இனங்கண்டறிவதற்கும் முகங்கொடுப்பதற்கும் பொதுச் சுகாதார தயார்ப்படுத்தலை வலுப்படுத்துவதற்கும் உதவும் வகையில் இலங்கை கொவிட்-19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்புகள் தயார்நிலைப்படுத்தல் திட்டத்திற்கு  128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலகவங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

விரைவுபடுத்தப்பட்ட இந்தப் புதிய உதவித் தொகையானது இலங்கையிலுள்ள மக்கள் அனைவருக்கும் நன்மையளிப்பதுடன் வைரஸை தடுத்து நிறுத்துதல் அன்றேல் அதன் பரவலைக் குறைத்தல் , ஒட்டுமொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்தல் , சமூகங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கும். இந்த உதவியானது அவசரகால பதிலளிப்பு கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கும் ஆய்வுகூடங்கள் மற்றும் வைத்தியசாலைகளின் திறனை வலுப்படுத்துவதற்கும்  ,  நோயாளர்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துவதற்கும்  ,  மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும்  ,  கைகளைக் கழுவுதல் துப்பரவாக இருத்தல் இ  சமூக இடைவெளி  ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவும்.

''கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்கள் தொடர்பான அவசரகால நிலைமைகளுக்காக நாட்டைத் தயார்ப்படுத்துவதற்கும் உலக வங்கி,  இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றிவருகின்றது.''என மாலைதீவு நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் ஐடா இஸட். சுவரோய் ரிடிகொவ் தெரிவித்தார். ''துரிதமாக பரவிவரும் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை இலங்கை ஏற்கனவே எடுத்துள்ளது. எம்முடைய ஒத்துழைப்பு இதற்கு பக்கபலமாக இருப்பதுடன்  எதிர்கால அபாயங்களை குறைப்பதற்கு உதவும்''என அவர் மேலும் கூறினார். 

உலக வங்கியின் கொவிட்-19 விரைவு படுத்தப்பட்ட வசதி ஏற்பாடு மூலமாக புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்தான 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான உலக வங்கியின் மானியக் கடன் நிகழ்ச்சி;த்திட்டனூடாக சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்தான 93.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி ஆகியவற்றை இந்த திட்டம் உள்ளடக்கியுள்ளது.  ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்கள் மற்றும் அவரசகால பதிலளிப்பு தடுப்பு மற்றும் தயார்நிலை ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்ற ஏனைய பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்.

இந்தத்திட்டத்தினூடாக இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் அவசரகால நிலைக்கு முகங்கொடுப்பதற்கான மேம்படுத்தப்பட்ட ஆற்றலைக்கொண்டிருக்க கூடுமாக இருப்பதுடன் தற்போதைய நிலையில் கொவிட்-19 சந்தேகத்திடமானவர்களையும் உறுதிப்படுத்தப்பட்டவர்களையும் பராமரித்து சிகிச்சையளிக்கின்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட ஒரே நிறுவனமான தேசிய தொற்று நோயியல் நிறுவனம் போன்று ஏற்கனவே இருக்கின்ற நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

இதற்கு மேலதீகமாக உயிர் மருத்துவவியல் தொடர்பான இலங்கையின் பிரதான ஆய்வு நிலையமாகவும் கிருமியியல் ,  நுண்ணுயிரியல் மற்றும் ஒட்டுண்ணியியல் தொடர்பான இலங்கையின் பிரதான ஆய்வுகூடமாகவும் விளங்குகின்ற தேசிய மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் முதலாவது 3ம் கட்ட உயிர்ப்பாதுகாப்பு ஆய்வுகூடத்தை கட்டியெழுப்புவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உலக வங்கி குழுமத்தின் கொவிட்-19 க்கான பதிலளிப்பு செயற்பாடு

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் கொவிட் -19ற்கு பதிலளிப்பதற்கும் குணமடையும் காலப்பகுதியை குறைக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக உலக வங்கி குழுமமானது 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் துரித நடவடிக்கை திட்டத்தை முன்னெடுத்துள்ளது.  இந்த உடனடி பதிலளிப்பு உலகளாவிய தொற்றுநோய் காரணமாக சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களை எதிர்நோக்கிள்ள நாடுகள் அவற்றிற்கு முகங்கொடுப்பதற்கு தேவையான நிதிவழங்கல் கொள்கை ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.  இந்த உலகளாவிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு உதவவும் தொழில்களைப் பாதுகாக்கவும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் (IFC) 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியளிக்கின்றது புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (IBRD )மற்றும் சர்வதேச அபிவிருத்தி சங்கம் (IDA) ஆகியன சுகாதார தேவைப்பாடுகளுக்காக ஆரம்ப கட்டமாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. நாடுகளுக்கு பரந்துபட்ட வகையிலான ஆதரவு தேவைப்படுகின்ற நிலையில் ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களைப் பாதுகாக்கவும் வியாபார நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவும் பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதற்காகவும் அடுத்துவரும் 15 மாதகாலப்பகுதியளவிலான காலத்திற்கு உலகவங்கி 160 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான தொகையை வழங்க ஆவனசெய்துள்ளது. 


தொடர்பு

Washington
Elena Karaban
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
Colombo
Dilinika Peiris-Holsinger
+94115561325
dpeiris@worldbank.org
Api
Api