Skip to Main Navigation
செய்தி வெளியீடு பிப்ரவரி 27, 2019

இலங்கையில் ஏற்றுமதிகளை அதிகரிப்பதால் தொழில்களை முன்னேற்றவும் ஊதியத்தை உயர்த்தவும் முடியும்.

கொழும்பு, பெப்ரவரி 26, 2019 -  ஏற்றுமதிகளை அதிகரித்தல் இலங்கையில் மேம்பட்ட தொழில்களையும் உயர்வான ஊதியத்தையும் பெற்றுக்கொள்வதற்கு வழிகோலமுடியும். இதில் பெண்களுக்கான மேலும் முறைசார் தொழில்களும் உள்ளடங்கும். தொழில் சந்தை கொள்கைகளானது வேறுபட்ட தொழிலாளர் குழுக்கள் சரியான திறன்களை பெற்றுக்கொள்வதற்கு உதவக்கூடியதாக இருப்பதுடன் அதிக ஏற்றுமதிகளின் பலாபலன்களை சமூகத்தின் மத்தியில்  பரந்தளவில் பகிர்ந்துகொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வழிகோலும்.

 'தொழிலுக்கான ஏற்றுமதிகள்: தெற்காசியாவில் வர்த்தகம் மூலமான ஆதாயங்களை அதிகரித்தல்' என்ற தலைப்பிலான புதிய அறிக்கை இன்று கொழும்பில் வெளியிடப்பட்டது. ஏற்றுமதியில் ஏற்படும் அதிகரிப்பானது சராசரி ஊதிய உயர்விற்கு வித்திடும் என்பதைக் காண்பிக்கின்றது.

உலக வங்கி, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆகியன இணைந்து தயாரித்துள்ளன. தெற்காசியாவில் உள்ள உள்ளூர் தொழிலாளர் சந்தைகளில் ஏற்றுமதிகளின் தாக்கத்தை ஆய்வு செய்வதில் புதிய தளத்தை உருவாக்குகின்றது. இந்தியா, இலங்கையிலிருந்த வணிகத் தரவோடு வீட்டுத் தரநிலை அல்லது தொழிலாளர் அளவிலான ஆய்வுகள் மூலம் தொகுக்கப்பட்ட தரவுகளை இணைப்பதன் மூலம், உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியின் மாற்றங்களின் ஊதியங்களை  பகுப்பாய்வு செய்வதில் ஒரு புதிய முறையை பயன்படுத்துகின்றது. பூகோளமயமாக்கல் எவ்வாறு உள்ளூர் தொழில்வாய்ப்புக்கள் மற்றும் ஊதியங்களுக்கு பங்களிப்புச் செய்யும் என்பதனை ஆராய்வதில் புதிய அணுகுமுறை அமையும். ஆனால் முன்னைய ஆய்வுகளைப் போல் இல்லாமல் இது ஏற்றுமதிகளில் கவனம் செலுத்துகின்றது.

'ஏற்றமதியானது உள்ளூர் தொழிலாளர் சந்தைகளின் செயல்திறனை முன்னேற்றமடையச் செய்ய முடியும். அதிகளவிலான ஏற்றுமதியின் நன்மைகள் பரந்தளவில் பகிரப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டிய அதேவேளை தெற்காசியாவில் ஏற்றுமதியினை அதிகரிக்கச் செய்வதற்கு உரிய கொள்கைகள் நடைமுறைக்கிடப்படவேண்டும் என்பதை எமது ஆய்வு காண்பிக்கின்றது'என உலக வங்கியின் முன் நிலை பொருளியலாளரும் அறிக்கை எழுதிய நூலாசிரியர்களில் ஒருவருமான கிளேடிஸ் லோபேஸ்-அகிவேடோ தெரிவித்தார். 'புதிய தொழில்வாய்ப்புகளை நோக்கி நகர்தலிருந்தும் நன்மைகளை பெற்றுக் கொள்வதிலிருந்தும் மக்களைக் தடுத்துநிறுத்துகின்ற மட்டுப்பாடுகளுக்கு  தீர்வுகாணுதல் முக்கியமானதாகும்.'

அதிக ஏற்றுமதிகளின் நன்மைகளை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது  பரந்தளவில் பகிர்ந்துகொள்வது . தொழிலாளர்களின் திறனை அதிகரித்தல், அதிக தொழில்களில் இளைஞர்களையும் பெண்களையும் இணைத்தல் மற்றும்  தொழிலாளர் நகர்வுகளைவலுப்படுத்தல் செலவுகூடியதென முன்னெடுக்கப்படும் திரிவுபடுத்தல்களை எதிர்கொள்ளுதல் என்பன இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சில கொள்கை செயற்பாடுகளாகும்.

'பூகோளமயமாக்கலானது எவ்வாறு தொழிலாளர்கள் மற்றும்  தேசிய தொழிற்சந்தைகள் மீது தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பாக பொருளியலாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் மேம்பட்டரீதியான புரிந்துணர்வு அவசியமாகும்;' என சர்வதேச தொழிலாளர் அமைப்பு(ILO)  ஆய்வு திணைக்களத்தைச் சேர்ந்த  சிரேஸ்ட பொருளியலாளரும் அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவருமான டானியல் சமான் தெரிவித்தார். 'அதிக ஏற்றுமதிகள் தொழிலாளர்களிற்கு நன்மைகளை ஏற்படுத்தும் என எமது ஆய்வுகள் காண்பிக்கின்றன, ஆனால் இந்த நன்மைகள் தொழிற் சந்தையிலுள்ள அனைவரையும் சென்றடைகின்றதா என்பதை உறுதி செய்ய சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் எந்தவொரு குழுவும் ஒதுக்கி வைக்கப்படலாகாது'. 

2010-2017இற்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை அண்ணளவாக 5.8 வீதம் வளர்ச்சியடைந்துள்ளதோடு வறுமைக்குட்பட்டு வாழும் மக்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வாறிருப்பினும், பல இலங்கையர்கள் ஒழுங்குமுறையான பொருளாதாரத்தில் முறையான தொழிலை இன்னும் பெறவில்லை மற்றும் பிராந்தியங்களுக்கிடையே வேதனத்திலும் தொழிலாளர் பண்புகளிலும்  பாரியளவில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏற்றுமதி தேறிய உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 39 வீதத்திலிருந்து வீழ்ச்சியடைந்தது. 2016 இல் 21.4 வீதமாக தேறிய உள்நாட்டு உற்பத்தி காணப்பட்டது. ஏற்றுமதி அபிவிருத்தி துணி, ஆடை மற்றும் விவசாயத் துறை போன்ற சில துறைகளில் மட்டும் இவ் ஏற்றுமதி அபிவிருத்தி வரையறுக்கப்பட்டிருந்தது. சரியான கொள்கைகள் மூலம், வர்த்தகத்திலிருந்து கிடைக்கும் ஆதாயங்கள் தொழிலாளர்களிற்கு கிடைக்கப்பெறுவதை ஏற்றுமதி நோக்குநிலையூடாக இலங்கை உறுதிப்படுத்த முடியும். அத்தோடு பரந்தளவில் அதை பரவச் செய்வதனால் பின்தங்கிய குழுக்கள் நன்மையடைகின்றன.


செய்தி வெளியீட்டு எண்: SAR/2019

தொடர்பு

உலக வங்கி
டிலினிகா பீரிஸ்
கொழும்பில்
+94 (011) 5561347
dpeiris@worldbank.org
அடம் போவர்ஸ்
வாஷிங்டனில்
+1 (202) 473-9277
ekaraban@worldbank.org
ILO
சன்ட்ரா சேனாரத்ன
கொழும்பில்
sandra@ilo.org
Api
Api