Skip to Main Navigation
செய்தி வெளியீடு

அனர்த்த மீட்பு முயற்சிகளின் முன்னேற்றத்திற்கு இலங்கைக்கு உதவும் உலக வங்கி

செப்டம்பர் 5, 2016


கொழும்பு, செப்ரம்பர் 5, 2016- காலநிலை-சார் ஆபத்துக்களில் இருந்து மக்களையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் காப்பதற்கும், அனர்த்தங்களுக்கு வினைத்திறன் மிக்க வகையில் முகம்கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் 42 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கையும், உலக வங்கியும் இன்று கைச்சாத்திட்டன.

2014ஆம் ஆண்டு ஏப்ரலில் அனுமதிக்கப்பட்ட தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் காலநிலை நெகிழ்வுதிறன் மேம்படுத்தல் செயற்றிட்டத்திற்கான (CRIP) நீர்ப்பாசன மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு உட்கட்டமைப்பு மற்றும், அண்மைய கடுமையான காலநிலை தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களின் திருத்த மற்றும் அனர்த்த பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும்இ மேலதிக நிதியிடலாக இந்த நிதி வருகின்றது.

காலநிலை மற்றும் அனர்த்த ஆபத்தினை குறைப்பதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால இடையீடுகளுக்கு நிதியிடுவதற்கு வடிவமைக்கப்பட்ட இணைந்த தொகுதியான Catastrophe Deferred Draw-Down Option facility (CAT-DDO) உடன் CRIPஇற்கு அனுமதியளிக்கப்பட்டது. பணப்புழக்கத் தடைகள் பொதுவாக அதிகளவில் காணப்படும், இயற்கை அனர்த்தம் ஒன்றின் பின்னர் நடுத்தர வருமானம் பெரும் நாடுகளுக்கு உடனடி பணப்புழக்கத்தை வழங்குவதற்கு எதிர்பாராத கடன் திட்டத்தை CAT-DDO வழங்கப்படுகின்றது.

மீண்டும் மீண்டும் நிகழும் இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் இழப்புக்களுக்கு நிதி வழங்குவதற்கே இந்த வகையான நிதியிடல் பொதுவாக பயன்படும். உயர்ந்தளவு இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளின் பரந்த சவால் முகாமைத்துவ உபாயத்தின் ஒரு அங்கமாக இவை மிகவும் பயனுள்ளதாகும். 42 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக, 2016ஆம் ஆண்டு மே மாத வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினைத் தொடர்ந்து இந்த வசதியின் ஊடாக 101.47 மில்லியன் டொலர்களையும் அரசாங்கம் பெற்றுக் கொண்டது.

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கு மோசமான காலநிலையினால் ஏற்படக் கூடிய சவால்களை அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், மண்சரிவும் வெளிப்படுத்தின. பொதுவில், ஆபத்து நிதியிடலின் ஊடாக மக்களின் வாழ்க்கை முதலீடுகளுக்கும் மற்றும் உடைமைகளுக்குமான சவால்களை முகாமை செய்தல் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் Idah Pswarayi-Riddihough தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு மே மாதத்தில், ‘ரோணு’ எனப்படும் புயல்காற்றினால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, 96 பேர் கொல்லப்பட்டதுடன், 22 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், மண்சரிவும் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அனர்த்தத்திற்குப் பின்னரான தேவை மதிப்பீட்டின் (PDNA) ஆரம்ப முடிவுகளின்படி, மொத்த பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் 570 மில்லியன் டொலருக்கு அதிகம் என கண்டறியப்பட்டது.

அனர்த்தம் மற்றும் மனித வாழ்க்கையின் மீது அதன் தாக்கங்களின் தீவிரம் குறித்து கவனம் செலுத்தி, மேல், வடமேல், சப்ரகமுவா, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2005ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ சட்ட இல. 13இன் கீழ் அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனம் செய்தார். “ஜனாதிபதியினால் அவசர கால நிலை பிரகடனம் செய்யப்பட்டமையானது, அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு துணையாக இருந்தது. இந்த வசதியின் கீழ் கடந்த வாரம் அரசாங்கம் பெற்ற 101.47 அமெரிக்க டொலர்கள்இ 2016ஆம் ஆண்டு மே மாத வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் விளைவுகளில் இருந்து மீள வருவதற்கு அரசாங்கத்துக்கு உதவும்” என செயற்றிட்டத்தின் செயலணித் தலைவர் Marc Forni  தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடன் இணங்கப்பட்ட வதிவிட பங்காளித்துவ வரைபுநகலின் (CPF) அடிப்படையிலேயே உலக வங்கி குழுவின் நடவடிக்கைகள் வழிநடத்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, அடுத்த நான்கு வருடங்களுக்கு ஒத்துழைப்பினை CPFஆனது வடிவமைக்கும். உலக வங்கியின் தற்போதைய தொகுப்பானது 1.9 பில்லியன் நிதி உறுதிமொழிகளை உள்ளடக்கியூள்ளது.

ஊடகத் தொடர்பாளர்கள்
ஊர் Washington:
Joe Qian
தொலை: +1 (202) 473 56331
jqian@worldbank.org
ஊர் Colombo:
Dilinika Peiris-Holsinger
தொலை: +94 (011) 5561347
dpeiris@worldbank.org

வாய்ப்பு வளங்கள்



Api
Api

Welcome