கொழும்பு - செப்ரம்பர் 5, 2016 - இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீளமைப்பு நிகழ்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு சர்வதேச அபிவிருத்தி அமைப்பிடமிருந்து (IDA) 100 மில்லியன் டொலர்கள் கடன் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கமும், உலக வங்கியும் இன்று கைச்சாத்திட்டன.
நாட்டின் போட்டித்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பருப்பொருளாதார நிலைபேற்றினை மேம்படுத்துவது தொடர்பில் இலக்கு வைத்த மீளமைப்பு தொகுதியொன்றின் ஊடாக புதிதாக 1 மில்லியன் தொழில்களை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் பொருளாதார மீளமைப்பில் இலங்கையானது உறுதியான தேர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றது. மோதலுக்குப் பின்னரான பொருளாதார வளர்ச்சிக்கு வழிநடத்தும் மற்றும் இலங்கையர்களுக்கு மேலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கும், தனியார் துறையின் ஆற்றலை பரவலாக்கும் இயலுமை கொண்ட பொருளாதாரத்தால் வழிநடத்தப்படும் பொது துறையின், பாரியளயு உள்ளக நகர்விற்கான இலங்கையின் தேவையை அண்மைய உலக வங்கி கற்கையான முறைசார் வதிவிட கண்டறிதல் அறிக்கை சுட்டிக்காட்டியது.
இந்த தசாப்தத்தில் இலங்கைக்கான இரண்டாவது DPFஆன, இலங்கை போட்டித்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி நிலைபேற்றுத் தன்மை அபிவிருத்தி கொள்கை நிதியிடலானது (DPF)இ தனியார் துறை போட்டித்திறனுக்கு தடைகளை குறைத்தல், வெளிப்படையான, நன்கு முகாமை செய்யப்பட்ட பொது நிறுவனங்களை உருவாக்கல் மற்றும் நிதி நிலைபேற்றினை மேம்படுத்தல் என்பவற்றின் மூலம் அரசாங்கத்தின் மீளமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதற்கு இலக்கு வைத்துள்ளது.
“வருமான படிவரிசையில் மேல் நோக்கி செல்வதே அனைத்து இலங்கையர்களினதும் எதிர்பார்ப்பாகும். இதனை யதார்த்தமாக்குவதற்கு, தொழிலை உருவாக்கும் அதேவேளை, வளர்ச்சியை நிலைபெறச் செய்யும் நோக்குடன் முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் சமநிலைசார்ந்த சவால்களை அரசாங்கம் எதிர்கொள்கின்றது” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் Idah Pswarayi-Riddihough தெரிவித்தார். “மேம்படுத்தப்பட்ட சேவை விநியோகம், சமூக செலவிடல் மற்றும் மூலதன முதலிடல் ஆகியவற்றிற்கு நிதி வசதியை உருவாக்கும் அதேவேளை, நிதி நிலைபேறுத் தன்மையை மேம்படுத்துதல் என்பன இலங்கையை மேலும் போட்டித்திறன் மிக்கதாக்குவதற்கான முன்னுரிமைகளாகும். மறுசீரமைப்புக்களில் இருந்து வெற்றியை உறுதி செய்வது ஒரு தடவையில் நடைபெறும் காரியமல்ல. விளைவுகளை நிலைத்திருக்க உறுதி செய்வதற்கு பல்வேறு கருவிகளை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிலையான பருப்பொருளாதார சூழல் மற்றும் நல்லாட்சி என்பதில் இருந்து எதிர்வுகூறக்கூடிய கொள்கைகள், நிதிக்கான போதிய அணுகும் வசதி, மற்றும் வர்த்தகம் செய்வதற்கான செலவினை குறைக்கும் வினைத்திறன் மிக்க ஒழுங்குபடுத்தல் சூழல் எனும் வரை, பல்வேறு காரணிகள் தகுந்த இடத்தில் இருப்பதன் மூலமே, நாட்டின் போட்டித் திறனை மேம்படுத்தி, மேலும் சிறந்த தொழில்களை உருவாக்க முடியும்” என உலக வங்கியின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறனுக்கான நிகழ்ச்சித் தலைவர் Emanuel Salinas Munoz தெரிவித்தார். “இலங்கையின் தொழிற்றுறைகள் வளர்வதற்கு, போட்டித்திறன் அதிகரிப்பதற்கு, உலக பொருளாதாரத்துடன் மேலும் இணைவதற்கான ஆற்றலை வெளிப்படுத்தும், இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த நிகழ்ச்சி உதவும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
முன்மொழியப்பட்ட ஒட்டுமொத்த நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சே பொறுப்பாகும். அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு, நிதி அமைச்சு, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடக அமைச்சு, கணக்காய்வாளர் திணைக்களம், முதலீட்டுச் சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பன ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களாகும்.
கொள்கை மற்றும் நிறுவன மறுசீரமைப்புக்களின் தொகுதி ஒன்றின் பூர்த்தியின் அடிப்படையில் வழமையான பாதீட்டு பொறியமைப்புக்களின் ஊடாக வழங்குவதற்கு திறைசேரிக்கு நேரடியாக பிணைக்கப்படாத நிதி ஆதரவினை DPF செயற்பாடுகள் வழங்குகின்றன. அரசாங்கத்திற்கு எவ்வித செலவும் இன்றி, இந்த நிகழ்ச்சியின் கீழ் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தொழில்நுட்ப உதவியை உலக வங்கி வழங்குகின்றது.