கொழும்பு, பெப்ரவரி 16, 2016 – மக்கள் தொகையின் 7 வீதத்திற்கு குறைவாக வறுமையை குறைப்பதில் உற்சாகமளிக்கக் கூடிய தேர்ச்சியை இலங்கை எட்டியுள்ளது. ஆனால், மிதமான வறுமையின் பைகள் எஞ்சியுள்ளன. அத்துடன், நீண்ட கால வருமான பற்றாக்குறையை அடையாளம் காணல் மற்றும் மேலும் போட்டித்திறன் மிக்க, உள்ளடக்கமான பொருளாதாரத்தை போஷித்தல் என்பவற்றிலேயே எதிர்கால செழுமை தங்கியுள்ளது என உலக வங்கியினால் இன்று அறிவிக்கப்பட்ட புதிய கற்கை முடிவுகள் தெரிவிக்கின்றன.
உற்பத்தித் திறன் குறைந்த விவசாயம் என்பதிலிருந்து, தொழிற்சாலை மற்றும் சேவைத் துறைகள், மேலதிக நகரமயமாக்கல், மற்றும் அதிகரிக்கும் உள்ளக கேள்வி என்பற்றை நோக்கி பொருளாதாரம் நகருவதால் தொழில் வருமானங்கள் அதிகரிப்பதால் வறுமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வறுமை மதிப்பீடு கண்டறிந்துள்ளது.
வறுமையை ஒழித்தல் மற்றும் பகிரப்பட்ட செழுமையை ஊக்குவித்தல் என்பவற்றில் நிலையான தேர்ச்சிக்கான பிரதான இடையூறுகளை அடையாளம் காண்பதற்கு உலக வங்கி குழுவானது கட்டமைப்புசார் நாட்டு கண்டறிதல் (SCD) முறையை முன்னெடுத்தது. கல்வி, சுகாதாரம் மற்றும் வேறு சேவைகளில் முதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் ஆற்றலை பாதிக்கச் செய்து, உலகில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் குறைந்த வரியை கொண்ட நாடாக இலங்கை உள்ளமையை SCD சுட்டிக்காட்டுகின்றது. அதேவேளை, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவது பாதுகாப்புவாத கொள்கைகள், குறைந்தளவு வெளிநாட்டு நேரடி முதலீடு, நடுத்தர வருமான நாட்டிற்குத் தேவையான திறன்களில் வீழ்ச்சி, மற்றும் அநாவசியமான பாரிய பொதுத்துறை என்பவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையர் அனைவரையும் வறுமையில் இருந்து வெளியே கொண்டு வரல் மற்றும் அனைவருக்குமான செழிப்பான எதிர்காலத்தை உறுதி செய்தல் என்பவற்றுக்கு இந்த விடயங்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமாகும்.
ஆய்வின் முடிவுகளை ஒப்புக்கொண்டு “வறுமையை குறைக்கும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பினை வழங்கும் அதிகளவு தொழில்களை உருவாக்குவதே எமக்கு முன்னுரிமையாகும். இதனை நோக்கியதாக, முதலீடுகளுக்குத் தேவையான சந்தர்ப்பத்தை உருவாக்கும் அதேவேளை உலக சந்தையில் வெற்றிகரமாக போட்டித்திறன் மிக்கதாக இருப்பதற்கு எமது ஆற்றலை நாம் பரவலாக்க வேண்டும்.” என இலங்கையின் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வறுமையானது குறைந்துள்ள அதேவேளை, இடம், பால்நிலை மற்றும் இனம் என்பவற்றில் தேர்ச்சியானது சமனற்று உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான வறியவர்கள் நகரத்திற்குள் அல்லது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில், பெருந்தோட்டத் துறையில் மற்றும் மொனராகலையில் அதிகளவு வறுமை உள்ளது. தொழில் சந்தையில் பெண்களின் பங்காளித்துவமானது நடுத்தர வருமானம் பெறும் நாட்டிற்கு பல தசாப்தங்களாக குறைவாக உள்ளது. நடுத்தர வருமானம் பெறும் நாட்டிற்கு மிகவும் குறைவான சமூக செலவுடன் இணைந்து, சமத்துவமின்மையும் அதிகரித்துள்ளது. மக்கள் தொகையில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள், நாளொன்றிற்கு 225 ரூபாய்கள் என்ற வறுமையை நோக்கிச் செல்லும் ஆபத்தை கொண்டுள்ளனர்.
“நிலையான அபிவிருத்தியை முன்னிறுத்தும் அதேவேளை, மக்கள் தொகையின் வறியவர்கள் மற்றும் ஏனைய துரதிருஷ்டமான குழுக்களின் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிப்பதனை இலக்கு வைத்த கொள்கைகளை வடிவமைப்பதற்கு உதவுவதற்கு அரசாங்கத்துடன் எமது பங்காளித்துவத்தினை வலுப்படுத்துவதற்கு முக்கியமான ஆதாரத்தளம் மற்றும் பகுப்பாய்வினை இந்த புதிய ஆய்வு வழங்குகின்றது.” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பணிப்பாளர் பிரான்கோசி குளோட்ஸ் (Françoise Clottes) தெரிவித்தார். “அரசாங்கத்தின் வினைத்திறன், வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான மற்றும் உறுதியான நிறுவனங்களை உருவாக்குவதனை இலக்கு வைத்த செயலேற்பாடுகளை இந்த அறிக்கையின் முடிவுகள் மேலும் வலுப்படுத்தும். எனவே, நாட்டின் அதிகரிக்கும் செழிப்பில் அனைத்து இலங்கையர்களும் பங்கேற்க முடியும்.” என அவர் மேலும் கூறினார்.
கடந்த தசாப்தங்களில் பொருளாதாரத்தில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்புக்கு இடையிலான சமநிலையில் வேறுபாட்டை அவதானித்து இலங்கையின் தனியார் துறை எவ்வாறு வளர்ச்சி காண்கின்றது என SCD ஆய்வு செய்கின்றது. உற்பத்தித் திறனை, கடனுக்கான அணுகும் வசதியை, மற்றும் நல்ல தொழில்கள் உருவாகுவதனை குலையச் செய்யும் தொடரும் முறைச்சார்பின்மையை அது சுட்டிக்காட்டுகின்றது.
“நிலையான வளர்ச்சியை தூண்டுவதில் தனியார் துறை வகிக்கக் கூடிய பெரும் பாகத்தினையும், இலங்கை தொழில் முனைவோரின் சாத்தியத்தை வெளிப்படுத்தக் கொள்கைகளின் தேவைகளையும் இந்த முடிவுகள் மீள் வலியுறுத்துகின்றன” என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IFCஇன் வதிவிட முகாமையாளர் அமீனா அரிப் (Amina Arif) தெரிவித்தார்.
அரசாங்கங்களுக்கு நிதி மற்றும் பகுப்பாய்வு ஆதரவினை வழங்கும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் மற்றும் மீளமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி, தனியார் துறைக்கு நிதி மற்றும் ஆதரவு சேவைகளை வழங்கும், சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) மற்றும் முதலீட்டை முன்னிறுத்துவதற்கு சவால் காப்புறுதியை வழங்கு பல்தரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் என்பவற்றை உள்ளடக்கியதாக உலக வங்கி குழுமம் உள்ளது. நிதியிடல், கொள்கை ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு என்பன இணைந்ததாக இலங்கை அபிவிருத்திக்காக அனைத்து பங்குதாரர்களுடன் அது பணியாற்றுகின்றது. இலங்கை அரசாங்கத்துடன் இணங்கிய வதிவிட பங்காளித்துவ கட்டமைப்பினால் (CPF) குழுவின் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டப்படுகின்றது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கலை வடிவமைக்கும் அடுத்த CPF நிறைவு கண்டுள்ளது. நிதியிடல் அர்ப்பணிப்புக்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி விபரக்கோவை கொண்டுள்ளது. அத்துடன் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட தனியார் துறைக்கான நிதி அர்ப்பணிப்புக்களை IFC கொண்டுள்ளது.