Skip to Main Navigation
சிறப்பம்சக் கதைமார்ச் 2, 2022

இலங்கையில் நிலையான மீன்பிடி மூலம் வாழ்வாதாரங்களை மேம்படுத்தல் மற்றும் அதிக வருமானம்

The World Bank

Fish make up about 50% of Sri Lankans’ animal protein intake, a ratio 3 times the global average. 

World Bank

கதை சிறப்புக்கூறுகள்

  • இலங்கையர்களின் அசைவ புரத உட்கொள்ளுதலில் சுமார் 50% ஆனது மீனாகும், இது உலகின் சராசரி அளவினை விட மூன்று மடங்கு அதிகமாகும். மீன்பிடித் துறை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது.
  • இலங்கை மீனவர்கள் பிடிக்கும் மீன் வளங்களில் ஒரு பிரதான பகுதி வீணாகி, மீன்பிடிப்புக்கள் குறைந்து வருகின்றன.
  • சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிதி ரீதியாக நிலையான முறையில் முகாமை செய்யும் பொழுது, கடலோர மீன்வளர்ப்பானது ஏற்றுமதி வருமானம் மற்றும் திறன் வாய்ந்த தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதில் குறித்த பங்களிப்பாற்றுகின்றது.

இந்தியப் பெருங்கடலில் 1,620  கிலோமீட்டர் கடற்கரை மற்றும் 517,000 சதுர கிலோமீட்டர் பரப்பு பொருளாதார ரீதியில் மீன்பிடித்தல் வலயம், பயிற்சிகள் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பிரத்தியேக உரிமைகளை இலங்கை கொண்டுள்ளது. எனினும், இதன் மூலம் எல்லையற்ற மீன்பிடி வளங்கள் அங்கு காணப்படுகின்றன என்பதற்கில்லை.

உண்மையில், 50,000 இற்கும் மேற்பட்ட முக்கியமான மீன்பிடி கப்பல்களின் பகுதிகள் ஏற்கனவே அதிகமான மீன்பிடித்தலில் ஈடுபட்டதினால் அவற்றை மீள்கட்டமைப்பு செய்வதற்கான தேவை உள்ளது. மீன்பிடி குறைந்து வருகிறது, அதனால் படகு மற்றும் கியரின் செயல்திறனை அதிகரிப்பது  மேலும் அழிவையே ஏற்படுத்தும்.

நிலையான மீன்பிடி வளத்தை ஆதரித்தல்


இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்புள்ளா இந்தியப் பெருங்கடலின் மஞ்சள் சூரை மீனின் நிலையினை எடுத்துக் கொள்ளுங்கள். எனினும், மஞ்சள் சூரை மீன்களை பிடிப்பது அதிகமாக இருந்தாலும் அவற்றை பிடிப்பதை அதிகரிக்க முடியாது. மஞசள் சூரையை மீளப் பெறுவதற்கு அதனை பிடிக்கும் அனைத்து நாடுகளினதும் ஒருங்கிணைந்த செயற்பாடு அவசியம், இதனை நிறைவேற்ற இலங்கையால் முடியும் அத்தோடு இலங்கை அதற்கான தலைமைத்துவத்தை எடுத்து அதனை சாத்தியமாக்க வேண்டும். தரவு-அடிப்படை மற்றும் கூட்டு மீன்பிடி முகாமைத்துவ திட்டங்கள் கரையோர மீன்வளங்களை பராமரிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட மேலாண்மை இந்திய பெருங்கடல் டூனா ஆணையகம் மஞ்சள் சூரைகளை மீளக்கட்டியமைக்கும் மீன்பிடியினை குறைக்கும் திட்டத்துடன்  இணைதல் மற்றும் மீன்பிடியிலிருந்து வருவாயினை அதிகரிக்கவும் மேலும் திறன்வாய்ந்த தொழிலை வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றது. “இந்த அணுகுமுறை கோவிட்-19 காலத்தின் பாரதூரமான விளைவுகளிலிருந்து மீள்வதற்கான உலக வங்கியின் பசுமையான, மீள்தன்மை மற்றும் பிரத்தியேக அபிவிருத்திக் கட்டமைப்பிற்கு ஏதுவாக உள்ளது.” என ஃபாரிஸ் ஹதாத்-செர்வொஸ், உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கான இயக்குனர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் உள்ள ஏறத்தாழ 5000 “மல்டிடே” எனப்படும் 5 வாரங்கள் வரையில் கடலில் தங்கியிருந்து மீன்பிடி படகுகள் உரிய குளிரூட்டிகள் இன்மையால் இவ்வாறான சூரை மீன்களை கரைக்கு கொண்டுவருவதற்கு முன்னரே பழுதடைந்து விடுகின்றன.  இதன் காரணமாக, சிறு அளவிலான மீன்களே ஏற்றுமதி-தரத்தில் காணப்படுகின்றன. மீன் பழுதடைவதை குறைப்பதனால் கணிட்சமான அளவு ஏற்றுமதி வருவாயினை அதிகரிக்க முடியும். மொத்தமான மீன்பிடியினை அதிகரிக்காது, நவீனமயப்படுத்தப்பட்ட மீன்களை கையாளும் முறைகள் மற்றும் கடலில் செலவிடும் நாட்களை குறைத்தல் போன்ற அம்சங்களை இணைத்து செயற்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும்.

சுகாதார தரங்களினடிப்படையில் துறைமுக தளங்களை மேம்படுத்துவதும் இதற்கு உதவியாக இருக்கும். கப்பல்களின் கட்டுமானம், மறுசீரமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்றவை புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும். மஞ்சள் சூரை மீன்பிடியினைத் தாண்டி பிற ஆரோக்கியமான மீன்வளங்களை உருவாக்கல் மற்றும் அதன் பெறுமதியை அதிகரித்தல் போன்ற பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

இலங்கையின் அண்மைக்கால நீல நிற நீந்தும் நண்டு (Sri Lanka’s recent experience with the blue swimming crab )பற்றிய அனுபவம், கைவசமுள்ள இருப்பை எவ்வாறு மதிப்பிடுதல் மற்றும் நிர்வகித்தல் போன்றவை மீன்பிடி செயற்பாடுகள், வைப்பிருப்பு நிலை மற்றும் சந்தை அங்கீகாரத்தை மேம்படுத்த முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாகும். சதுப்புநிலங்கள் மற்றும் பாறைகள் போன்ற கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதும் சில சமயங்களில் மீட்டெடுப்பதும் அவசியமானதாகும். இச் சுற்றுச்சூழல் அமைப்புக்கள் அபிவிருத்தி மேம்பாடுகளாலும், நகரமயமாக்கல் அது போன்று அதீத வாநிலை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களால் அழிக்கப்பட்டுள்ளன.

The World Bank

The fisheries sector in Sri Lanka supports close to one million fishers, workers, and their families.

Nadeera Rajapakse

மீன்வளர்ப்பிற்கான முன்நோக்கிய ஒரு வழி

“இலங்கையில் அதிகரித்து வரும் கடல்வாழ் உணவுகளுக்கான தேவை இலங்கையில் மீன்வளர்ப்பிற்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்துவதற்கு ஒரு முக்கிய சந்தர்ப்பத்தை வழங்குகிறது, இதன் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரித்தல், தனியார் துறைக்கான வருவாயினை அதிகரித்தல் மற்றும் நாட்டிற்கான வரி வருமானத்தை அதிகரிக்கிறது. இது பசுமை, மீள்தன்மை மற்றும் ஒருமித்த அபிவிருத்திக்கான சிறந்த உதாரணமாகும்.” என உலக வங்கியில் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான பயிற்சி முகாமையாளர் கிறிஸ்டோஃப் கிரெபின் கூறுகிறார்.

 

1990 களில், கட்டுப்பாடற்ற இறால் தொற்று நோய் உருவாக்கம் மற்றும் பரவலின் காரணமாக தரம் குறைந்த கரையோர சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் கைவிடப்பட்ட இறால் பண்ணைகளையும் ஏற்படுத்தியது. இறால் பண்ணைகள் மீட்சிபெற்று தற்பொழுது வடமேற்கில் காணப்படும் இறால் பண்ணைகளிலங்கையின் ஏற்றுமதி வருவாயில் 7 சதவிகிதத்தை கொண்டுள்ளது.  ஆனால் கடற்பாசி, சதுப்பு நில நண்டு, கடல் வெள்ளரி, கடற்பாசி மற்றும் பால்மீன் போன்ற உயர் மதிப்புள்ள இனங்களில் பல்வகைப்படுத்த கணிசமான எதிர்பார்ப்பு உள்ளது.

 

மீன் வளர்ப்பிற்கான சுற்றுச் சூழல் அணுகுமுறை- பரந்த சூழலியல் அமைப்பில் மீன்வளர்ப்பினை ஆரம்பிப்பதற்கான ஒரு உபாயமாகும், அது நிலையான மேம்பாடு, சம்த்துவம் மற்றும் ஒன்றோடொன்று இணைந்த சமூக மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினை ஊக்குவிக்கிறது – இது சூழலியல் தாக்கத்தை குறைத்து நிலையான உற்பத்தியை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றது. கழிவுநீர் மேலாண்மை, உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் உணவுத்திறன் ஆகியவற்றிற்கான சர்வதேச கையாள்தல்களை மேற்கொள்வது நிதி மற்றும் சூழலியல் பாதகங்களை குறைத்து மொத்த பண வருவாய் மற்றும் தயாரிப்பின் தரத்தினை மேம்படுத்தும். இது இலங்கைக்கான மீன்வளர்ப்புடன் தொடர்புடைய தயாரிப்புக்களுக்கு அதிக இலாபமீட்டும் சந்தைகளை உருவாக்கித்தரும்.

 

வாழ்வாதாரங்கள் மீதான தாக்கத்தை குறைத்தல்

மீன்வளத்தின் நிலையான முகாமைத்துவத்திற்கு மொத்த மீன்பிடியினை குறைக்க வேண்டிய தேவை உள்ளதால், மீனவர்கள் மற்றும் அதனை செயற்படுத்துவோரின் வாழ்வாதாரத்தில் தாக்கம் செலுத்தும். இத்தகைய பாதிப்புக்களை குறைக்க, பிற துறைகளில் வேலை செய்யும் திறன்களுக்கான பயிற்சி, பொருத்தமான வேலை திட்டங்கள் மற்றும் மீன்வள வட்டத்திலுள்ள இளம் தலைமுறையினருக்கு வாழ்வாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கான நிதியுதவி மற்றும் பல வகையான தீர்வுகள் அவசியமாகும். பாதிக்கப்பட்டோருக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் பிற சமூகவியல் உதவியினையும் கருத்தில் கொள்தல் அவசியமாகும்.

 

பாலின விடையங்களை கையாள்தல்

புவியியல் மற்றும் இன வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும், மீன்பிடித் துறையில் பெண்களும் ஆண்களும் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கின்றனர். மீன்பிடி பெரும்பாலும் ஆண்களால் செய்யப்படுகிறது, அதே சமையம் 10% இற்கும் குறைவான மீனவர்கள் பெண்களாக காணப்படுகின்றனர், இவர்கள் கரையோரப்பகுதிகளில் காணப்படும் மீன், இறால், நண்டு, மட்டி போன்றவற்றை ‘சேகரிப்பதில்’ – அல்லது பிடிப்பதில் ஈடுபடுகின்றனர்.

பெண்கள் பெரும்பாலும் குடும்பப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், ஆண்கள் வெளியில் செல்லும் போது மீன்பிடி கூட்டங்களிலும் கலந்து கொள்கின்றனர். எனவே மீன்வள மேலாண்மை திட்டமிடல் செயற்பாடுகளில் பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். “மதிப்புச் சங்கிலியில் மதிப்பு-சேர்க்கப்பட்ட மற்றும் தர மேம்பாட்டுக்கான நோக்கங்களை கொண்ட விடையத்தில், அல்லது மாற்று வாழ்வாதாரங்களை ஆதரிப்பது போன்ற விடையங்களில் பெண்களை இணைப்பதற்காக, ஆண்கள் மற்றும் பெண்களின் வெவ்வேறு கலாச்சார பாத்திரங்களை வைத்து வடிவமைக்க வேண்டும். உதாரணமாக, பெண்கள் வீட்டில் செய்ய வேண்டிய கடமைகளையும் உள்ளடக்கியதாக அவர்களது வேலை நேரம் கணக்கிடப்பட வேண்டும்.” என மாலத்தீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கிக்கான நாட்டு மேலாளர் சியோ கந்தா கூறுகிறார்.

 

இலங்கை மீன்பிடித்துறையின் நிலையான மற்றும் திடமான வளர்ச்சி, தெளிவான, தொடரான விடையங்களின் அடிப்படையில், புதிய அறிவு மற்றும் சுற்றுச் சூழலியல், சமூகவியல் சவால்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையில் தங்கியுள்ளது.


இலங்கையின் கடல் மீன்பிடி, கரையோர மீன்வளர்ப்பு மற்றும் அவற்றை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான மீன்பிடி முன்னுரிமைகள் அமைச்சின் நெருக்கமான ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட உலக வங்கி அறிக்கை, மீனவ சமூகங்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை நிலையாக மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் முதலீடுகளுக்கான திடமான பரிந்துரைகளை வழங்குகிறது.

மார்ச் 3, 2022 அன்று இலங்கை அரசாங்கத்துடனான கூட்டு நிகழ்வில் இவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும், இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையிலான சாத்தியமான கூட்டுப்பங்காண்மை பற்றிய கலந்துரையாடலும் இதில் உள்ளடங்கும். வெளியீட்டு நிகழ்வு உலக வங்கியின் இலங்கைக்கான முகநூல் பக்கத்தில் - www.Facebook.com/WorldBankSriLanka என்ற இணைப்பில் கொழும்பு நேரம் xxx முதல் xxx வரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Blogs

    loader image

WHAT'S NEW

    loader image