Skip to Main Navigation
சிறப்பம்சக் கதை நவம்பர் 1, 2017

இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலவரம்: புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் அபாயங்களை முகாமைத்துவம் செய்தல் ஆகியன நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு 'மிகவும் முக்கியமானதாகும்.'

Image

Download the  November 2017 edition of the Sri Lanka Development Update Creating Opportunities and Managing Risks for Sustained Growth


கதை சிறப்புக்கூறுகள்

  • அரச முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகம் செய்ய முடியாத துறைசார் வளர்ச்சி மாதிரியில் இருந்து தனியார் முதலீட்டை அடியொற்றி வர்த்தகம் செய்யக்கூடியதான துறைசார் வளர்ச்சி மாதிரியாக மாற்றம் பெறும் இலட்சியகரமான நகர்வை இலங்கை முன்னெடுத்துள்ளது.
  • புதிய வளர்ச்சி மாதிரியை இலங்கை தழுவிக்கொள்ளும் போது பல பேரண்டப் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் அது மேலும் நெகிழ்வுடையதாக மாறும். ஆனால் புதிய அபாயங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய ஏதுநிலைக்குள்ளாகலாம்.
  • நிலைபேறான அபிவிருத்திக்கு அத்தியாவசியமான இடர் முகாமைத்துவமானது முன்னோக்கிய செயற்திறனும் முறையான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் தேவையாகும்.

கடந்து சென்ற ஆறு மாத காலப்பகுதியில் இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய நகர்வுகளை ஆய்வுக்குட்படுத்துகின்றதான, உலக வங்கியின் புதிய இலங்கை அபிவிருத்தி நிலவர அறிக்கை, வரலாற்றுப் பயணத்தில் இந்த நாடானது தீர்க்கரமானதொரு கட்டத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது. போருக்குப் பிந்திய காலப்பகுதியில் உறுதியாகக் கால்பதித்துள்ள இலங்கை, தற்போது எதிர்காலத்தை நோக்கிய பார்வையைச் செலுத்துவதுடன் வறுமையை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஒவ்வொரு வாய்ப்புக்களையும் தழுவிக்கொள்ள வேண்டும். அத்தோடு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் நெகழ்வுத்திறன் கொண்ட வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டும்.

அரச முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட, வர்த்தகம் செய்ய முடியாத துறைசார் வளர்ச்சி மாதிரியில் இருந்து தனியார் முதலீட்டை அடியொற்றிய, வர்த்தகம் செய்யக்கூடியதான துறைசார் வளர்ச்சி மாதிரியாக மாற்றம் பெறும் இலட்சியகரமானதும் சவால் மிக்கதுமான நகர்விலேயே வெற்றிபெறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு காணப்படுகின்றது. இது உலகிலுள்ள மிகப் பெரியதும் வேகமாக வளர்ச்சி கண்டுவருகின்றதுமான சில பொருளாதார வல்லரசுகளுக்கு அருகாமையிலுள்ளதான இட அமைவு அனுகூலத்தைப் பயன்படுத்தி நன்மை பெற இந்த கடல்மாற்றமானது வழிவகுக்கும்.

நாணய மற்றும் நிதியியல் முனைகளில் மேற்கொள்ளப்பட்ட சரியான சீர்திருத்தக் கொள்கைச் செயற்பாடுகளானது, படிப்படியான ஸ்திரப்பாட்டிற்கு வழிவகுத்தது. அத்தோடு 2017 ஆம் ஆண்டின் முதலாவது பாதியில் இலங்கையின் ஒட்டுமொத்தமான பொருளாதார செயற்பாடு பரந்தளவில் திருப்திகரமாக காணப்படுகின்றது.

நிலைபேறான வருமானத்தை முன்னிறுத்திய நிதிநிலை ஒருங்கிணைப்பினை நோக்கிய பாதையில் முக்கியமானதொரு மைல்கல்லாக 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய உள்நாட்டு வருமானச் வரிச்சட்டம் காணப்படுகின்றது. பெறுமதி சேர் வரி (வட்) சீர்திருத்தங்கள், அதன் முதலாவது ஆண்டு நடைமுறைக்கிடல் காலப்பகுதியில் நிதிநிலை ஒருங்கிணைப்பு ஸ்திரப்பாட்டை நோக்கி முன் நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சிறிய முதன்மை சமநிலையால் ஆதரிக்கப்படும் நிலையில், 2017ற்கான ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையானது மொத்த தேசிய உற்பத்தியின் 5.1 சதவீதமாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருமானத்தை ஈட்டும் செயற்பாடுகளை நடைமுறைக்கு உட்படுத்தியமையே இதற்கு பிரதானமான காரணமாகும்.  இதன் காரணமாக 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்திக்கும் கடனுக்குமான விகிதம் ஸ்திரநிலையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது 2012 ஆம் ஆண்டு முதலாக தொடர்ச்சியாக அதிகரித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

அனேகமான ஏற்றுமதிகளுக்கு தீர்வைகளிலிருந்து விலக்களிக்கின்ற ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கை, 2017 மே மாதத்தில் மீண்டுமாக பெற்றுக்கொண்டது. இந்த வெற்றிகரமான நகர்வுகள் முன்னேற்றத்தைக் காண்பிப்பதாக இருப்பினும் மிகமுக்கியமான சீர்திருத்தங்கள் பின்தங்கிய நிலைக்குள்ளாகியுள்ளதாக இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் அவதானத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இவற்றில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான அனுமதிகளை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் One Step Shop முதலீடுகளுக்கான ஏதுநிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற அரசிற்கு சொந்தமான நிறுவனங்கள் தொடர்பான சீர்திருத்தங்கள் ஆகியன அடங்கும். இதற்கு மேலதிகமாக கடன் முகாமைத்துவ நிகழ்ச்சி நிரல் மற்றும் கணக்காய்வாளர் சட்டத்தை நிறைவேற்றல் ஆகிய விடயங்களில் அர்த்தபூர்வமான முன்னேற்றம் இன்னமும் காணப்பட வேண்டியுள்ளது.

மேல் நடுத்தர வருமானம் ஈட்டுகின்ற நாடென்ற ஸ்தானத்தை அடையும் இலட்சியத்தை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனால் இலங்கை அதன் முழுமையான திறனை எய்தவேண்டுமாக இருந்தால், சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்நகர்த்துவதுடன் அதன் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்க வேண்டும்.

முன்னோக்கியுள்ள சவால்களைக் கோடிட்டுக் காட்டியுள்ள உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சிரேஸ்ட வதிவிட பொருளியலாளர் ரல்ஃப் வன் டூர்ண் கூறியதாவது 'இலக்கை அடைந்துகொள்ள வேண்டுமெனில்  நாட்டிலுள்ள வறிய அன்றேல் நலிவடைந்த தரப்பினரில் அதிகமானவர்களை மறந்துவிடாமல் இருப்பதை உறுதிசெய்து கொண்டு அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கக் கூடியதாகவும் போட்டித் தன்மையை  ஊக்குவிக்கக் கூடியதாகவும் கட்டமைக்கப்பட்ட சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் அதேவேளை, பேரண்ட நிதியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுதல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அதன் நெகிழ்வுப் போக்கை அதிகரித்துக் கொள்ளுதல் முக்கியமானதாகும். கொள்கைக் கருப்பொருட்களே இதற்கான பதில்களாக அமைந்துள்ளன. புதுமையான வகையில் நடைமுறைப்படுத்துமிடத்து அவை கட்டமைப்பு சரிசெய்தலை ஆதரிக்க முடியும், சீர்திருத்தங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கமுடியும். அத்தோடு வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுத்தரமுடியும்.'

நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் உலக வங்கியின் அபிவிருத்தி பிந்திய நிலவர அறிக்கையின் இந்தப் பதிப்பானது விசேட அவதானத்தைச் செலுத்துகின்றது. இலங்கை மேலும் தனியார் முதலீட்டினை அடியொற்றிய ஏற்றுமதியைப் பிரதானமாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்றபோது, பேரண்டப் பொருளாதார அபாயங்களுக்கு முகங்கொடுக்கும் விடயத்தில் மேலும் நெகிழ்வுப் போக்குடையதாக மாறும் அதேவேளை, புதிய அபாயங்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஏதுநிலைக்குள்ளாகும். குடும்பங்கள், நிறுவனங்கள், பொதுத் துறை மற்றும் பேரண்டப் பொருளாதாரம் என சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இந்த அபாயங்களை எங்ஙனம் முகாமைத்துவம் செய்யமுடியும் என்பதை இந்த அறிக்கையானது ஆராய்கின்றது.

அறிக்கையிலுருந்து மேலும் சில முக்கியமான தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1.வளர்ச்சி வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பொதுக் கடன் அளவு வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சி ஆகியவற்றால் உந்தப்பட்டு வளர்ச்சியானது 2017ல் 4.6 சதவீதத்தை எட்டும் எனவும், அதற்கு அப்பால் 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தலானது, வர்த்தகம் செய்ய முடியாத துறைகளில் தங்கியுள்ள தற்போதைய நிலையில் இருந்து நீண்ட காலத்தில் வினைத்திறன்மிக்க வர்த்தகம் செய்யக்கூடியதான துறைகளை நோக்கிய மாற்றத்திற்கு உதவும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 2017 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பணவீக்கமானது ஸ்திரநிலையடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  நிதி ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தடத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்ற எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுக்கடன் அளவு வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த நிதி ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமையுமிடத்திலும் எந்தவகையான அதிர்ச்சிகளுக்கும் உட்படாத நிலையிலும், இந்த ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக ஐந்தாண்டு கால அதிகரிப்பை முடிவிற்கு கொண்டுவருவதாக 2017 ஆம் ஆண்டு பொதுக் கடன் சுமை, மீண்டும் ஒரு கீழ்நோக்கிய பாதையில் கொண்டுவரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

2. நிதி ஒருங்கிணைப்பு பாதையில் நிலைத்திருப்பது முக்கியமானதொரு முன்னுரிமையாகும்.

இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலவர அறிக்கையானது பொதுக்கடன் விடயத்தில் காணப்படும் அபாயங்களை முகாமைத்துவம் செய்வதில் அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் முக்கியத்தை எடுத்துணர்த்துகின்றது. பல்வேறு வகையான சீர்திருத்தங்கள் முக்கியமானதாக அமைந்துள்ளன. ஆனால் அரச செலவீனங்களை முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் இலங்கை எதிர்காலத்தில் மேலும் அதிர்ச்சிகளுக்கு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும். அனர்த்த தயார் நிலைமையானது இதில் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

2017 இல் அனர்த்தங்களுக்கான சான்றுகள் பேரண்டப் பொருளாதார தரவுகள் எங்கிலுமே காணப்பட்டன.  விவசாயத்தில் வரட்சியின் தாக்கமானது மொத்த தேசிய உற்பத்தியின் வீழ்ச்சிக்கு வித்திட்டதுடன், உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு காரணமாகியது.  அத்தியாவசியப் பொருட்களுக்கான தீர்வையை தற்காலிகமாக நீக்கியமையினால், வருமானத்தில் சரிவு காணப்படுகின்றது. செலவீனங்களை மீள ஒதுக்கீடு செய்தல், அத்தியாவசியப் பொருட்களின் அதிகரித்த இறக்குமதிகள், அதிகரித்த மசகு எண்ணெய் இறக்குமதி (2016/17ல் ஏற்பட்ட வரட்சியினால் நீர்மின் உற்பத்தியில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக)  வினைத்திறன் மிக்க துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புக்கள் காரணமாக ஏற்றுமதிகள் குறைவாக இடம்பெற்றன.

இந்த நாடு தீவிரமான மக்கள் தொகை மாற்றத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். பிராந்தியத்தில் மிகவும் வேகமான வகையில் வயதானவர்களைக் கொண்டுள்ள நாடு என்ற வகையிலும் ஒய்வூதிய வீச்சை விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுவரும் நிலையிலும் வயதானவர்களுக்கான ஆரோக்கியம் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு என்பன இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாகும்.

குறைக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறை, உலகளாவிய நிதிச் சந்தைகளில் ஏற்படும் தாக்கங்களை வரையறையில் வைத்திருக்க உதவும் என அறிக்கையைத் தயாரித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை படிப்படியாக இறுக்கமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நகர்வானது இலங்கையின் தனியார் துறையினருக்கு மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற கடனை விடுவிக்கும்.

3. நிலைபேறான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு அபாயங்களை முகாமைத்துவம் செய்வதும் புதிய வாய்ப்புக்களை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானதாகும்.

2014 ஆம் ஆண்டு உலக அபிவிருத்தி அறிக்கையால் அறிமுகப்படுத்தப்பட்ட இடர் முகாமைத்துவ கட்டமைப்பின் அடிப்படையில், ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவமானது அபிவிருத்திக்கான சக்திமிகுந்த கருவி என இலங்கை அபிவிருத்தி பிந்திய நிலவர அறிக்கை வாதிடுகின்றது. அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதில் ஆபத்து என்பது இன்றியமையாத ஒரு பாகம் என்ற புரிந்துணர்வில் ஊன்றி, பொது மற்றும் தனியார் செயற்பாடுகளூடாக எவ்வாறு ஆபத்துக்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை அது கருத்திற்கொண்டுள்ளது. சில ஆபத்துக்கள் தனிப்பட்டவர்களின் வீச்செல்லைக்கு அப்பாற்பட்டதாகும். ஆனால் அனைத்துவிதமான இடர் முகாமைத்துவமும் முன்கூட்டி ஊகித்து நடவடிக்கை எடுக்கின்றதும் திட்டமிடப்பட்டதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான இடர் அணுகுமுறையை கைக்கொள்வது அவசியமாகும்.

தற்போது முன்னெடுக்கப்படுகின்றதும் திட்டமிடல் கட்டத்தில் இருக்கின்றதுமான சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட இடர் முகாமைத்துவம் ஆகியன அதிகரித்த மற்றும் நிலைபேறான வளர்ச்சி, புதியதும் சிறப்பான சம்பளத்தை வழங்கும் தொழில்கள், இயற்கை அனர்த்தங்களின் போது குறைவான தாக்கம், அதிகமான வியாபார வாய்ப்ப்புக்கள், அதிக ஏற்றுமதிகள், மேம்பட்ட உட்கட்டமைப்பு மேலும் ஸ்திரமான பேரண்டப் பொருளாதார சூழ்நிலை அடங்கலாகப் பல சாதகமான பெறுபேறுகளை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் சீர்திருத்தங்களால் பாதகமான முறையில் தாக்கங்களுக்கு உள்ளானவர்கள் விடயத்தில் பொதுக் கொள்கையினூடாக உணர்வுபூர்வமான முறையில் முகாமைத்துவம் செய்யப்படவேண்டும்.

வலுவூட்டப்பட்டதும் நன்கு இலக்கு வைக்கப்பட்டதுமான சமூக பாதுகாப்பு வலை, மீள்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் மாற்றத்தக்க ஓய்வூதிய ஏற்பாடுகள் மூலமாக நிதியியல் மற்றும் வர்த்தக கொள்கை சீர்திருத்தங்களால் இல்லங்கள் தோறும் குடும்பங்களுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கமுடியும் என உலக வங்கியின் இலங்கை அபிவிருத்தி நிலவர பிந்திய அறிக்கை குறிப்பிடுகின்றது.

வர்த்தக வசதிகளை மேம்படுத்துதல் அடங்கலாக வர்த்தக சூழ்நிலையை முன்னேற்றுகின்றமை, வளரும் துறைகளில் இருந்து நிறுவனங்களும் ஊழியர்களும் நன்மையடைவதை இலகுபடுத்தும் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Api
Api